ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'தாஷமக்கான்' | மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்தாரா சாய் பல்லவி? | நெட்பிளிக்ஸ் முடிவு : அதிர்ச்சியில் தென்னிந்திய திரையுலகம் | விமலின் மகாசேனா படம் டிசம்பர் 12ல் திரைக்கு வருகிறது | பராசக்தி பட டப்பிங்கில் அதர்வா | கோவா சர்வதேச பட விழாவில் அமரன் : சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | எங்களைப் பொறுத்தவரை உபேந்திரா தெலுங்கின் சூப்பர் ஹீரோ தான் : ராம் பொத்தினேனி | ப்ரோ கோட் டைட்டில் விவகாரம் : நீதிமன்ற விசாரணையில் ரவி மோகனுக்கு சாதகம் | ‛கில்' பட ரீமேக்கில் இருந்து விலகிய துருவ் விக்ரம் | வாட்ச் மீதுள்ள காதல் குறித்து தனுஷ் |

இயக்குநர் லிங்குசாமி இயக்கத்தில், ராம் பொத்தினேனி, கீர்த்தி ஷெட்டி, ஆதி, அக்ஷரா கவுடா நடிக்கும் படம் தி வாரியர். தமிழ் தெலுங்கு மொழிகளில் தயாராகிறது. ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் சார்பில் ஸ்ரீநிவாசா சித்தூரி தயாரிக்கிறார். தேவிஸ்ரீ பிரசாத் இசை அமைக்கிறார்.
இந்த படத்தில் கீர்த்தி ஷெட்டி விசில் மஹாலட்சுமி என்கிற கேரட்டரில் நடிக்கிறார். அவரின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. இந்த போஸ்டரில் கீர்த்தி ஷெட்டி, சர்ட் & ஜீன்ஸுடன் ஸ்கூட்டர் ஓட்டிக்கொண்டிருக்கிறார். இதில் அவர் தெனாவெட்டாக திரியும் ஒரு கேரக்டர், அடிக்கடி விசில் அடிக்கும் பழக்கம் உள்ளவர். அதனால் தான் அவருக்கு விசில் மஹாலட்சுமி என்று பெயர் என்கிறார்கள்.
இதில் ராம் பொத்தனேனி போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார், ஆதி பினிஷெட்டி வில்லன் வேடத்தில் நடிக்கிறார். அக்ஷரா கௌடா மிக சுவாரஸ்யமான, முக்கியமான பாத்திரத்தில் நடிக்கிறார்.




