ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் ‛காத்துவாக்குல ரெண்டு காதல்'. இதனை நயன்தாராவுடன் இணைந்து அவரே தயாரிக்கிறார். நயன்தாரா, விஜய்சேதுபதி, சமந்தா, பிரபு, கலா மாஸ்டர், ரெடின் கிங்ஸ்லி உள்பட பலர் நடிக்கிறார்கள். அனிருத் இசை.
முக்கோண காதல் கதையில் தயாராகி உள்ள இந்த படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. கண்மணி எனும் நயன்தாரா, கதிஜா எனும் சமந்தா ஆகிய இரண்டு பேரையும் காதலிப்பவராக விஜய் சேதுபதி நடித்துள்ளார். இவர்களுக்கு இடையேயான பயணத்தை உணர்வுகளுடன் காமெடி, ரொமான்ஸ் கலந்து இயக்கி உள்ளார் விக்னேஷ் சிவன் என டீசரை பார்க்கும்போதே புரிந்து கொள்ள முடிகிறது.
தற்போது இந்த டீசர் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. அதோடு படத்தின் ரிலீஸ் தேதியையும் டீசரின் முடிவில் அறிவித்துள்ளனர். அதன்படி படம் வருகிற ஏப்., 28ல் தியேட்டர்களில் வெளியாகிறது.