இந்த மாதிரி வெற்றிக்காக 10 ஆண்டுகள் காத்திருந்தேன் : ‛ஆட்டமா தேரோட்டமா' பாடல் குறித்து ரம்யா கிருஷ்ணன் | நிதின் ஜோடியான பூஜா ஹெக்டே | மறுபிரவேசத்துக்கு வலுவான கதாபாத்திரங்களை தேடும் பிரணிதா | ஜனநாயகன் படப்பிடிப்பு தளத்துக்கு திரண்ட ரசிகர்கள் : பாபி தியோல் ஆச்சரிய தகவல் | பொய் செய்தி பரப்பாதீர்கள் : புகழ் வேதனை | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் பிரேமலு நாயகி | மிருணாள் தாக்கூர் உடன் இணைய விரும்பும் சிவகார்த்திகேயன் | நடிகராக அறிமுகமாகும் கங்கை அமரன் | அஜித் 64 படத்தில் மிஷ்கின்? | உண்மை சம்பவங்கள் அடிப்படையில் சிறை : லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட முதல்பார்வை |
தமிழில் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களில் அஜித் நடித்துள்ள 'வலிமை' படத்திற்குத்தான் தற்போது முதலிடம் உள்ளது. கடந்த மாதம் பொங்கலுக்கே வர வேண்டிய படம். கொரோனா பாதிப்பு அதிகமானதால் படத்தின் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டது.
'ஆர்ஆர்ஆர்' படத்தின் வெளியீட்டு அறிவிப்பு கூட வந்துவிட்டது, 'வலிமை' படத்தின் வெளியீட்டு அறிவிப்பு எப்போது வரும் என்று ரசிகர்கள் காத்திருப்பதாக நேற்றுதான் நாம் செய்தி வெளியிட்டோம். அது படக்குழுவினருக்குக் கேட்டுவிட்டது போல. இன்று காலையிலேயே படம் பிப்ரவரி 24ம் தேதி வெளியாகிறது என்று அறிவித்துவிட்டார்கள். அஜித் ரசிகர்கள் இந்த அறிவிப்பால் உற்சாகமடைந்துவிட்டார்கள்.
அடுத்து, 'ராதேஷ்யாம்' படத்தின் அறிவிப்பும் இன்று காலை வெளியானது. இந்தப் படமும் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 14ம் தேதி வெளியாக வேண்டிய படம். கொரோனா பாதிப்பு காரணமாக இப்படத்தின் வெளியீட்டையும் தள்ளி வைத்தார்கள். தற்போது படம் மார்ச் 11ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழில் ரசிகர்கள் எதிர்பார்க்கும் முக்கிய படங்களான 'வலிமை, எதற்கும் துணிந்தவன்' ஆகிய படங்களின் அறிவிப்பும், தெலுங்கில் 'ஆர்ஆர்ஆர், ராதேஷ்யாம்' படங்களின் அறிவிப்பும் வெளியாகிவிட்டது. இந்தத் தேதிகளைக் கணக்கில் வைத்து சில படங்களின் வெளியீட்டுத் தேதிகள் மாறவும், தள்ளிப் போகவும் வாய்ப்புள்ளது.