நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

'பாகுபலி' படங்களுக்குப் பிறகு தெலுங்கில் தயாராகி வரும் சில முன்னணி நடிகர்களின் படங்களை பான்--இந்தியா படமாக வெளியிட ஆரம்பித்தார்கள். ஓடிடியில் நேரடியாக வெளியாகும் சில படங்களும் பான்--இந்தியா படமாக ஐந்து மொழிகளிலும் வெளியாக ஆரம்பித்தன.
ஹாலிவுட் நடிகர் போல இருக்கிறார் என சில சினிமா பிரபலங்களாலேயே பாராட்டப்பட்டவர் நடிகர் அஜித். அவருடைய படங்களுக்கு தமிழகத்தில் மட்டுமே அதிக வரவேற்பு இருக்கிறது. மற்ற தென்னிந்திய மாநிலங்களிலும், வட இந்தியாவிலும் பெரிய வரவேற்பு இருந்ததில்லை.
தமிழ் சினிமாவில் இருந்து விஜய், தனுஷ், சிவகார்த்திகேயன் ஆகியோர் அடுத்து தெலுங்கு, தமிழ் மொழிகளில் உருவாக உள்ள படங்களில் நடிக்கத் தயாராகிவிட்டார்கள். எனவே, அஜித்தும் அவருடைய 61வது படமாக வினோத் இயக்கத்தில் நடிக்க உள்ள படத்தை பான்--இந்தியா படமாக வெளியிட திட்டமிட்டுள்ளதாகச் சொல்கிறார்கள். அதனால்தான், படத்தில் மலையாளம், தெலுங்கிலிருந்து சில முக்கிய நடிகர்களை நடிக்க வைக்கத் திட்டமிட்டுள்ளார்களாம். படத்தின் நாயகியாக பாலிவுட் நடிகை நடிக்கலாம் என்றும் தெரிகிறது.
'வலிமை' படத்தின் வெளியீட்டு அறிவிப்பிற்குப் பிறகு அஜித்தின் 61வது படம் பற்றிய அப்டேட் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.