சென்னையை விட்டு சென்றது ஏன்? சசிகுமார் விளக்கம் | தமிழிலும் வெளியாகும் 'இத்திக்கர கொம்பன்' | குழந்தைகளின் உளவியலை பேசும் 'நாங்கள்' | சிங்கப்பூர் பள்ளியில் படிக்கும் பவன் கல்யாண் மகன் தீ விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதி | பிளாஷ்பேக்: கடைசி வரை ஹீரோயின் ஆக முடியாத பிருந்தா பரேக் | பிளாஷ்பேக்: வண்ணத்தில் ரீ-ரிலீஸ் செய்யப்பட்ட சக்ர தாரி | 'தனுஷ் 55' படத்தின் கதை பற்றி அப்டேட் தந்த இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி | அசத்துமா 'அஅ - அ' கூட்டணி? வெளியானது அறிவிப்பு | தமிழில் மற்ற மொழி நிறுவனங்களின் ஆதிக்கம் | வீட்டில் அமைதியாக பிறந்தநாளைக் கொண்டாடிய அல்லு அர்ஜுன் |
'பாகுபலி' நாயகன் பிரபாஸ் தற்போது பான்-இந்தியா நாயகனாக மாறிவிட்டார். 'கேஜிஎப்' இயக்குனர் பிரஷாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ், ஸ்ருதிஹாசன் நடித்து வரும் படம் 'சலார்'. இப்படம் ஸ்ருதிஹாசனின் திரையுலகப் பயணத்தில் ஒரு முக்கியமான படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்ருதி நேற்று தன்னுடைய 37வது பிறந்தநாளைக் கொண்டாடினார். சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில் பிரபாஸ் பற்றியும் அவரது உணவு உபசரிப்பு பற்றியும் பாராட்டிப் பேசியுள்ளார்.
“சலார்' படத்தின் கதை அற்புதமானது, அதில் என்னுடைய கதாபாத்திரம் மிகவும் சுவாரசியமானது. இப்போதைக்கு இதைத்தான் சொல்ல முடியும். இயக்குனர் பிரஷாந்த்தின் இயக்கம் வித்தியாசமான பார்வை கொண்டது.
பிரபாஸ் மிகவும் அற்புதமான மனிதர். அடுத்து அவர் ஒரு சிறந்த சாப்பாட்டுப் பிரியர். நான் பார்த்ததிலேயே இந்த அளவிற்கு சாப்பாட்டின் மீது பாசம் கொண்டவர் இவர்தான். தினமும் மற்றவர்களுக்கு உணவு அளிக்க வேண்டும் என்று விரும்புபவர். உணவு மூலம் அன்பைப் பரிமாறுபவர். அவரது சாப்பாட்டு முறை நார்மலான ஒன்று அல்ல,” எனத் தெரிவித்துள்ளார்.