போர்ச்சுக்கல் நாட்டிற்கு ஹனிமூன் சென்ற சமந்தா- ராஜ் நிடிமொரு! | காத்திருங்கள்: அஜித்தின் 'மங்காத்தா' விரைவில் ரீ ரிலீஸ்! | தனுஷ் 54வது படத்தின் டைட்டில் போஸ்டர் எப்போது? | கதையின் நாயகியாக மாறிய தனுஷ் பட நடிகை! | ரியோ ராஜின் 'ராம் இன் லீலா' முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு! | நானி படத்தில் இணையும் பிரித்விராஜ்! | மீண்டும் ஒரு தெலுங்கு படத்தை ஒப்பந்தம் செய்த துல்கர் சல்மான்! | எனது பழைய போட்டோக்களை பகிராதீர்கள்: மும்தாஜ் வேண்டுகோள் | லெஸ்பியனாக இருந்தேன்: டைட்டானிக் ஹீரோயின் ஓப்பன் டாக் | சிவகார்த்திகேயனுடன் மீண்டும் இணையும் கல்யாணி |

பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி முடிவதற்கு சில நாட்களே உள்ளது. இந்நிலையில் ஓடிடியில் புதிய பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்ப உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தொலைக்காட்சியில் சுமார் 100 நாட்கள் வரை நடைபெறும் ரியாலிட்டி நிகழ்ச்சியானது, ஓடிடியில் 13 போட்டியாளர்களுடன் 45 நாட்கள் நடைபெறும். இதற்கான பணியை பிக்பாஸ் படக்குழுவினர் தொடங்கியுள்ளனர்.
மினி பிக்பாஸ் நிகழ்ச்சியில், டைட்டில் வின்னர்களை தவிர அனைத்து சீசன்களிலும் கலந்து கொண்ட பிரபலங்களிலிருந்து 16 பேர் தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர். தற்போதைய தகவலிலின் படி அனிதா சம்பத், ஜுலி, வனிதா விஜயக்குமார், சினேகன் உள்ளிட்டோர் லிஸ்டில் உள்ளனர். இந்த பிக்பாஸ் ஓடிடி வெர்சன் ஜனவரி இறுதியிலிருந்து 24 மணி நேரமும் நேரடி ஒளிபரப்பாகும் வகையில் தயாரிக்கப்படுகிறதாம். அதுமட்டுமில்லாமல் கமல்ஹாசன் தான் இந்த நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கவுள்ளாராம். எனவே, இந்த நிகழ்ச்சி குறித்தான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
இருப்பினும் இந்த பிக்பாஸ் ஓடிடி நிகழ்ச்சி, ஹாட் ஸ்டாரில் ஒளிபரப்பாகுமா? அல்லது வேறு தளங்களில் ஒளிபரப்பாகுமா? என்பது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை. இதனிடையே இந்த வாரம் முதல் போட்டியாளர்கள் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு ஓட்டல்களில் தனிமைப்படுத்தப்பட உள்ளனர். அதன்பின் போட்டியாளர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளனர்.