சினிமாவில் 60வது ஆண்டை தொட்ட வெண்ணிற ஆடை மூர்த்தி | ஜெயமோகன் படத்துக்கு இந்த நிலையா? | வில்லனாக மாறிய சேரன் | டான்ஸ் ஆட வெச்சிட்டாங்க : பிரபு நெகிழ்ச்சி | ஹரி ஹர வீரமல்லுவுக்காக 5 ஆண்டுகள் வேறு படங்களில் நடிக்காத நிதி அகர்வால் | பாலிவுட்டில் தடம் பதிப்பாரா ஜூனியர் என்டிஆர் | மோசடி வழக்கை சட்டப்படி சந்திப்பேன் : சாம் சி.எஸ் | பூமிகா ஆசை நிறைவேறுமா? | ஹீரோ இல்லாமல் நடந்த 'ஹரிஹர வீரமல்லு' பட விழா | ஜெயிலர் 2வில் மோகன்லால் இருக்கிறாரா? |
நடிகர் ஜெய் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடிக்க தொடர்ந்து போராடி வருகிறார். பிரேக்கிங் நியூஸ், பார்ட்டி, எண்ணித்துணிக, குற்றமே குற்றம் உள்ளிட்ட படங்களை நடித்து முடித்திருக்கிறார். இந்த படங்கள் அடுத்தடுத்து வரிசையாக வெளியாகிவுள்ளது. தற்போது அவர் சுசீந்திரன் இயக்கத்தில் சிவ சிவா என்ற படத்தில் நடித்து வருகிறார். 'குற்றமே குற்றம்' படத்திற்குப் பிறகு சுசீந்திரன் மற்றும் ஜெய் கூட்டணி இரண்டாவது முறையாக இந்த படத்தின் மூலம் இணைந்துள்ளனர். இந்தப் படத்தின் மூலம் இசையமைப்பாளராகவும் ஜெய் அறிமுகமாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
சினிமாவில் பிசியாக இருக்கும் ஜெய் கார் ஓட்டுவதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். அதனால் பார்முலா பந்தயங்களில் கலந்து கார் ஓட்டியுள்ளார். ஆனால் கடந்த மூன்று ஆண்டுகளாக இவர் ரேஸ் கார் ஓட்டாமல் இருந்துள்ளார்.
தற்போது எம்.ஆர்.எப் மற்றும் ஜேஏ மோட்டார் ஸ்போர்ட்ஸ் நடத்தும் பார்முலா போர் பந்தயத்தில் பங்கேற்க உள்ளார். மூன்று நாட்கள் போட்டியாக இந்த ரேஸ் நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் ஜெய்யின் கார் எண்,6.
3 ஆண்டுகளுக்கு பிறகு, மீண்டும் கார் பந்தயத்தில் ஜெய் களமிறங்குகிறார். இப்போட்டியில் நடிகர் ஜெய்க்கு அவர் நடிப்பில் உருவாகி வரும் எண்ணித் துணிக திரைப்பட குழு ஸ்பான்சர் செய்கிறது.