நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! | ‛கில்' படத்தின் தமிழ் ரீமேக்கில் ஹீரோ, வில்லன் யார் தெரியுமா? | அரசியல் கதைகள பின்னனியில் தனுஷ் 54வது படம்! | ஆகஸ்ட் 8ல் 6 படங்கள் ரிலீஸ்… | 2025ல் 50 கோடியைக் கடந்த 10வது படம் 'தலைவன் தலைவி' | பாய் பிரண்ட் உடன் படப்பிடிப்புக்கு வரும் நடிகை | தமிழுக்காக 'வெயிட்டிங்' : சிரிக்கும் சினேகா | எல்லோருடைய வாழ்க்கையையும் வாழ ஆசை: மாசாந்த் நடராஜன் | பணம், புகழ் இருந்தாலும், நிம்மதி, கவுரவம் முக்கியம்: ரஜினிகாந்த் பேச்சு |
ராஜமவுலி இயக்கத்தில் மரகதமணி இசையமைப்பில் ஜுனியர் என்டிஆர், ராம் சரண், ஆலியா பட், அஜய் தேவகன், ஒலிவியா மோரிஸ், சமுத்திரக்கனி மற்றும் பலர் நடிக்கும் படம் 'ஆர்ஆர்ஆர்'. 2022 ஜனவரி மாதம் 7ம் தேதி வெளியாக உள்ள இப்படத்தின் டிரைலர் டிசம்பர் 3ம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார்கள். தற்போது டிரைலர் வெளியிட்டைத் தள்ளி வைத்துவிட்டார்கள்.
இது குறித்து தயாரிப்பு நிறுவனமான டிவிவி என்டர்டெயின்மென்ட், “தவிர்க்க முடியாத சூழ்நிலைகளால் டிசம்பர் 3ம் தேதி ஆர்ஆர்ஆர் டிரைலரை வெளியிடவில்லை. விரைவில் புதிய தேதியை அறிவிக்கிறோம்,” எனத் தெரிவித்துள்ளார்கள்.
டிசம்பர் 6ம் தேதி அல்லு அர்ஜுன் நடிக்கும் 'புஷ்பா' பட டிரைலர் வெளியாக உள்ளது. அதற்கு முன்னதாக ஏட்டிக்குப் போட்டியாக 'ஆர்ஆர்ஆர்' டிரைலரை வெளியிடுகிறார்களோ என்ற பேச்சு இருந்தது. இந்நிலையில் டிரைலர் தள்ளி வைக்கப்பட்டுள்து.
டெக்னிக்கல் பிரச்சினை அல்லது, பிரபல தெலுங்கு சினிமா பாடலாசிரியர் சீதாராம சாஸ்திரி மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் தள்ளி வைக்கப்பட்டிருக்கலாம் என்கிறார்கள்.