''நான் அதிர்ஷ்டசாலி'': நல்ல நண்பராக மணிகண்டன் கிடைத்த மகிழ்ச்சியில் ஷான்வி | 'கேம் சேஞ்சர்'--ல் விட்டதை 'பெத்தி'யில் பிடித்த ராம் சரண் | தயாரிப்பாளர் எம்.ராமநாதன் காலமானார் | குட் பேட் அக்லி - எந்த விழாவும் இல்லை, எந்த சந்திப்பும் இல்லை | ஆரம்பித்த இடத்திற்கே மீண்டும் வந்துள்ள ஹரி | மாரீசன் படத்தில் கோவை சரளா | உங்கள் ஊகங்களை நிறுத்துங்கள்: ரசிகருக்கு அட்வைஸ் செய்த மாளவிகா மோகனன் | 'சந்தோஷ்' படத்தை வெளியில் திரையிடுவேன் : பா ரஞ்சித் அடாவடி | பிளாஷ்பேக்: பைந்தமிழ் கற்பதில் தாமதம்; பட வாய்ப்பை இழந்த நடிகை பண்டரிபாய் | மே 16ல் ரீ-ரிலீஸாகும் ஆட்டோகிராப் |
கன்னடத் திரையுலகின் முன்னணி நடிகராக திகழ்ந்தவர் புனித் ராஜ்குமார். கடந்த அக்டோபர் 29ம் தேதி மாரடைப்பு ஏற்பட்டு திடீரென மரணம் அடைந்தார். புனித் ராஜ்குமாரின் மறைவு நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. இந்த நிலையில் புனித் ராஜ்குமாரின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுக்கும் முயற்சிகள் தொடங்கி உள்ளன. புனித் ராஜ்குமாரின் வாழ்க்கை பல இளைஞர்களுக்கு முன்னோடியானது, நடிப்பு மட்டுமல்லாமல் மனிதாபிமானம், சமூக சேவை, கண்தானம், கல்வி உதவி என பல தளங்களில் அவர் பணியாற்றினார். எனவே அவரது வாழ்க்கை திரைப்படமாக தயாராக வேண்டும் என்று அவரது ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகிறார்கள்.
இதற்கு பதில் அளித்துள்ள கன்னட சினிமாவின் முன்னணி இயக்குனரான சந்தோஷ் ஆனந்த்ராம், புனித் ராஜ்குமாரின் வாழ்க்கையை திரைக்கு கொண்டு வர என்னால் இயன்ற முயற்சிகளை செய்வேன் என்று கூறியிருக்கிறார். இவர்தான் புனித் ராஜ்குமார் நடிப்பில் கடைசியாக வெளியான யுவரத்னா படத்தை இயக்கியவர். வேறு சிலரும் இந்த முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.