நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

விஜய்சேதுபதி நடித்த புரியாத புதிர் மற்றும் இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் ஆகிய படங்களை இயக்கியவர் ரஞ்சித் ஜெயக்கொடி. தற்போது விஜய் சேதுபதியுடன் சந்தீப் கிஷனையும் கூட்டணி சேர்த்து மைக்கேல் என்கிற படத்தை இயக்குகிறார். இந்த படத்தில் வில்லனாக மிக முக்கியமான வேடத்தில் நடிக்கிறார் இயக்குனர் கவுதம் மேனன். இந்தநிலையில் எனது குருவுடன் இணைந்து நடிப்பதில் சந்தோஷம் என அவருடன் இணைந்து நடிப்பது குறித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார் நடிகர் சந்தீப் கிஷன்.
இதுபற்றி சந்தீப் கிஷன் கூறும்போது, "கவுதம் மேனன் இயக்கிய வாரணம் ஆயிரம் படத்தில் அவரிடம் உதவி இயக்குனராக பணியாற்றினேன். அனேகமாக அவரிடம் மோசமாக பணியாற்றிய உதவி இயக்குனர்களில் நானும் ஒருவனாக இருப்பேன். இந்த திரையுலகில் எனக்கென ஒரு அடையாளம் கொடுத்தவர் அவர்தான். அதன்பிறகு தற்போது 15 வருடங்கள் கழித்து அவருடனேயே ஒரு படத்தில் இணைந்து நடிப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது" என்று கூறியுள்ளார்.