பிளாஷ்பேக்: ஒரே படத்தில் போலீஸ் அதிகாரிகளாக நடித்த சிவாஜியும், பிரபுவும் | பிளாஷ்பேக்: மாப்பிள்ளையை வெற்றி பெற வைத்த சர்க்கஸ் காட்சிகள் | அட்லி - அல்லு அர்ஜுன் படத்தில், 'பகிரக்கூடாத ஒப்பந்தம்' | 500 கோடி வசூலில் 'கூலி' | சச்சின் டெண்டுல்கர் ரசித்துப் பார்த்த '3பிஹெச்கே' | மீண்டும் இணைந்த பிரபுதேவா, வடிவேலு | சமந்தாவின் ‛மா இண்டி பங்காரம்' எப்போது துவங்குகிறது | ‛கேஜிஎப்' நடிகர் தினேஷ் மங்களூரு மறைவு | அந்த 7 நாட்கள் படத்தில் மந்திரியாக நடிக்கிறார் கே.பாக்யராஜ் | ராம் சரண் படத்தில் நடிக்க மறுத்த சுவாசிகா |
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்தவர் பிரபாஸ். இருப்பினும் பவன் கல்யாண், மகேஷ் பாபு அளவுக்கு அதி தீவிரமான ரசிகர்கள் அவருக்கு இல்லை. அவர்களை விடவும் அதிக சம்பளம் வாங்கியதில்லை. 'பாகுபலி' படங்களின் இரண்டு பாங்களும் வந்த பிறகு பிரபாஸ் சம்பளமும், மார்க்கெட்டும், இமேஜும் இந்திய அளவில் உயர்ந்தது. இப்போது மற்ற தெலுங்கு நடிகர்களைக் காட்டிலும், ஏன் இந்திய நடிகர்களைக் காட்டிலும் அதிக சம்பளம் வாங்கும் நடிகராக உயர்ந்திருப்பதாகச் சொல்கிறார்கள்.
தற்போது 'ராதே ஷ்யாம்' படத்தில் நடித்து முடித்துள்ளார் பிரபாஸ். இப்படம் ஜனவரி மாதம் வெளியாகிறது. அடுத்து 'ஆதி புருஷ், சலார்' மற்றும் நாக் அஸ்வின் இயக்கத்தில் ஒரு படம், சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் 'ஸ்பிரிட்' ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
இதில் 'ஆதி புருஷ்' படத்திற்கே அவருக்கு 150 கோடி ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டதாகத் தெரிகிறது. தற்போது 'ஸ்பிரிட்' படத்திற்கும் 150 கோடி ரூபாய் சம்பளம் என பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் 100 கோடிக்கும் அதிகமான சம்பளம் வாங்கும் ஹிந்தி நடிகர்களான சல்மான்கான், அக்ஷய் குமார் ஆகியோரை விடவும் பிரபாஸ் அதிக சம்பளம் பெறுகிறார் என பாலிவுட் மீடியாக்கள் பெருமையாக செய்திகளை வெளியிட்டுள்ளன.
'பாகுபலி 2' படத்திற்குப் பிறகு பிரபாஸ் நடித்து வெளிவந்த 'சாஹோ' படம் ஹிந்தியில் மட்டுமே ஓடி, மற்ற மொழிகளில் தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது. அந்தப் படம் வெளிவந்து இரண்டு வருடங்களுக்கும் மேலாகிவிட்டது. இருந்தாலும் பிரபாஸைத் தேடி பல பிரம்மாண்ட பட வாய்ப்புகள் வந்து கொண்டிருப்பது டோலிவுட், பாலிவுட்டில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.