பிராமணர்கள் குறித்து அவதுாறு கருத்து: மன்னிப்பு கேட்டார் 'மஹாராஜா' நடிகர் | சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? |
ஹாலிவுட் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி கடந்த 70 ஆண்டுகளாக நடித்து வந்தவர் டீன் டாக்வெல். பல்வேறு விருதுகளை குவித்த இவர் முதுமை காரணமாக சினிமாவில் இருந்து விலகி இருந்தார். 85 வயதான அவர் நேற்று முன்தினம் காலமானார். இதனை அவரது குடும்பத்தினர் அறிவித்துள்ளனர். அவருக்கு ஹாலிவுட் திரை உலகினர் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
டீன் டாக்வெல்லின் வாழ்க்கை குறிப்பு : 1936ம் ஆண்டு மார்ச் 5ம் தேதி கலிபோர்னியாவின் லாஸ் ஏஞ்சல்ஸில் பிறந்த டீன் ஸ்டாக்வெல் எம்ஜிஎம் தயாரிப்பு கம்பெனியில் குழந்தை நட்சத்திரமாக ஒப்பந்தம் செய்யப்பட்டார். அதன்பிறகு ஹீரோ, வில்லன், காமெடி மற்றும் குணசித்ர வேடங்களில் நடித்தார். குவாண்டம் லீப், டூன், ப்ளூ வெல்வட் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். 2016ம் ஆண்டு வெளியான மேக்ஸி ரோஸ் அவர் கடைசியாக நடித்த படம்.
லாங் டே ஜேர்னி இன்டூ நைட் படத்தில் நடித்தற்காக சிறந்த நடிகருக்கான கேன்ஸ் விருது பெற்றார். 1988ல் வெளியான மேரீடு டு தி மாப் படத்தில் நடித்தற்காக ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார்.