பிரேம் குமார் இயக்கத்தில் விக்ரம்? | ஷாருக்கானை வைத்து அலைபாயுதே திட்டம்! - மணிரத்னம் | தெலுங்குத் திரையுலகினர் மீது பவன் கல்யாண் கோபம் | கலாம் கதையை படமாக்குவது சவால்: இயக்குனர் ஓம் ராவத் | அரசியல் சீன், டயலாக் உருவாக்கி கொடுத்த நடிகர் | ரோஜாஸ்ரீயின் அழகு ரகசியம் | ‛‛கமல் ஒரு ஏணி; அவரை மதித்து மேலே செல்வேன், மிதித்து அல்ல'': சிம்பு | 'கேம் சேஞ்ஜர்' அனுபவம் ஒரு 'பயங்கரம்' - விலகிய எடிட்டர் பேச்சு | பிளாஷ்பேக்: மலைக்க வைக்கும் 50வது ஆண்டில் “மயங்குகிறாள் ஒரு மாது” | ஜூன் மாதத்தில் ‛சர்தார் 2' படப்பிடிப்பு முடியும் ; மாளவிகா மோகனன் |
நடிகர், இயக்குனர் விசு மூலம் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகப்படுத்தப்பட்டவர் நடிகை வினோதினி. 16 வயதில் கஸ்தூரி ராஜாவின் ஆத்தா உன் கோயிலிலே படத்தில் நாயகியாக அறிமுகப்படுத்தப்பட்டார். பாலுமகேந்திராவின் வண்ண வண்ண பூக்கள் அவருக்கு பெரிய அடையாளத்தை பெற்றுக் கொடுத்தது. அந்த படத்தில் அவர் ஆண்கள் சட்டை மட்டும் அணிந்து நடித்த காட்சி இப்போதும் பிரபலம்.
கன்னட, மலையாள மொழிகள் உட்பட, பல மொழிகளில் நாயகியாகவும், குணச்சித்திர வேடங்களிலும் பல படங்களில் நடித்தார். பின்னர் சின்னத்திரை தொடர்களிலும் நடித்தார். திருமணத்திற்கு பிறகு நடிப்பிலிருந்து ஒதுங்கியிருந்தவர் இப்போது மீண்டும் நடிக்க வருகிறார்.
இது குறித்து வினோதினி கூறியதாவது: என் அம்மா ஒரு நாடக நடிகை, அப்போதே நாடகங்கள் நடிக்க செல்லும் போது என்னை அழைத்து செல்வார். அந்தப்பழக்கம் மூலமாக நான் சிறு வயதிலேயே விசு சார் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தேன். அவர் படங்களில் மட்டுமே தொடர்ந்து 7 படங்கள் நடித்தேன். தொடர்ச்சியாக எனக்கு நிறைய வாய்புகள் குவிந்தன.
நாயகன் படத்தில் சிறு வயது சாராவாக நடித்தேன். என் வாழ்க்கை முழுவதுமே சினிமாவை சுற்றித்தான் இருந்தது. 16 வயதிலேயே நாயகியாகிவிட்டேன். கஸ்தூரிராஜா எங்கள் வீட்டுக்கு அருகில் தான் குடியிருந்தார். அவரது ஆத்தா உன் கோயிலிலே படத்தில் நாயகியாக அறிமுகப்படுத்தினார். அந்தப்படம் 100 நாட்கள் ஓடியது.
அதைப் பார்த்து தான் பாலுமகேந்திரா வண்ண வண்ண பூக்கள் படத்தில் நடிக்க வைத்தார். தமிழை விட கன்னடத்தில் நிறைய படங்களில் நாயகியாக நடித்தேன். கன்னடத்தில் நிறைய வாய்ப்புகள் வந்ததால் தமிழில் என்னால் கவனம் செலுத்த முடியவில்லை.
நான் திரும்பி வரும்போது இங்கு நிறைய புது நடிகைகள் வந்துவிட்டனர் அதனால் குணச்சித்திர பாத்திரங்கள் தான் செய்தேன். தமிழ் திரையுலகம் பிடிக்கும் என்பதால் அதிலும் தொடர்ந்து நடித்தேன். திருமணத்திற்கு பிறகு ஒரு கட்டத்தில் அம்மா அப்பாவை, அத்தை மாமா மற்றும் குழந்தைகளை பார்த்து கொள்ளும் பொறுப்பும் சேர்ந்து வந்துவிட்டதால், சினிமாவிலிருந்து, ஒதுங்க வேண்டியதாகிவிட்டது.
இது பெண்களின் வாழ்க்கையில் இயல்பான ஒன்றுதான். அந்த காலகட்டத்திலும் தொடர்ந்து எனக்கு வாய்ப்புகள் வந்து கொண்டு தான் இருந்தது. ஆனால் என்னால் தான் நடிக்க முடியவில்லை. என் பிள்ளைகள் வளர்ந்து விட்டார்கள், அவர்களே நீ நடிக்கலாமே எனக் கூறுகிறார்கள். நல்ல நல்ல வாய்ப்புகளும் தேடி வருகிறது. அதனால் நடிக்கலாம் என்றிருக்கிறேன். எனக்கு பொருந்தும் வித்தியாசமான பாத்திரங்களில் திரைப்படங்கள், வெப் சீரிஸில் நடிக்க ஆசைப்படுகிறேன். விரைவில் என்னை நீங்கள் மீண்டும், திரையில் பார்க்கலாம் என்றார்.