மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து வாழ்த்து பெற்ற அமரன் படக்குழுவினர் | எனக்கு கடவுள் நம்பிக்கை அதிகம் - ராஷி கண்ணா | சூர்யா 45 படத்தில் ‛லப்பர் பந்து' நடிகை | சிவராஜ் குமாருக்கு பதிலாக விஷால் | விஜய் மகன் இயக்கும் படத்தில் சந்தீப் கிஷன் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | 27 ஆண்டுகளுக்கு முந்தைய ஹாலிவுட் படத்தின் ரீமேக்கா விடாமுயற்சி? | 20வது பிறந்தநாளை எளிமையாக கொண்டாடிய அனிகா சுரேந்திரன் | தந்தை மறைவு : சமந்தா உருக்கமான பதிவு | கர்மா உங்களை விடாது : நயன்தாரா பதிவு யாருக்கு? | திரிஷா நடித்துள்ள மலையாள படத்தின் டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
சென்னை : பழம்பெரும் நடிகர் ஸ்ரீகாந்த் 82 சென்னையில் காலமானார். வயது மூப்பு காரணமாக அவரது உயிர் பிரிந்தது. மறைந்த முதல்வர் ஜெயலலிதா நடித்த முதல் படமான வெண்ணிறாடை படத்தில் ஹீரோவாக நடித்தவர் இவர் தான். 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர் 50 படங்களில் ஹீரோவாகவும் நடித்துள்ளார்.
வெண்ணிறாடை படத்தில் ஜெயலலிதா உடன் ஸ்ரீகாந்த் |
நடிகர் ஸ்ரீகாந்த் சினிமாவிற்கு வருவதற்கு முன் அமெரிக்க தூதரகத்தில் பணிபுரிந்து வந்தார். அப்போதிருந்தே மேடை நாடகங்களிலும் நடித்து வருவதை வழக்கமாக கொண்டிருந்த ஸ்ரீகாந்துக்கு 1964-ஆம் ஆண்டு இயக்குநர் ஸ்ரீதர் தயாரித்து, இயக்கிய "வெண்ணிறாடை" பட வாய்ப்பு கிடைத்து திரைத்துறைக்கு அறிமுகமானார். முதல் படத்திலேயே கதாநாயகனாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்து அவர் ஏற்று நடித்த டாக்டர் சந்துரு என்ற கதாபாத்திரத்திற்கு அழகு சேர்த்திருப்பார். இந்தப் படம் இவருக்கு மட்டுமின்றி மறைந்த முதல்வர் ஜெயலலிதா, நடிகை வெண்ணிறாடை நிர்மலா மற்றும் நடிகர் வெண்ணிறாடை மூர்த்தி ஆகியோருக்கும் முதல் படமாக அமைந்தது.
நடிகை லட்சுமி உடன் ஸ்ரீகாந்த் |
மேஜர் சந்திரகாந்த் என்ற நாடகத்தில் ஸ்ரீகாந்த் என்ற கதாபாத்திரத்தில் இவர் நடித்து நாடகத் துறையில் இவர் பிரபலமாக இருந்ததால் தனது சொந்தப் பெயரான வெங்கட்ராமன் என்ற பெயரை பயன்படுத்தாமல் ஸ்ரீகாந்த் என்ற பெயரிலேயே சினிமாவிலும் நடிக்கலானார். "வெண்ணிறாடை" படத்திற்கு பிறகு இவருக்கு பெரும்பாலும் குணசித்திர மற்றும் நகைச்சுவை வேடங்களே கிடைத்து என்றே சொல்லலாம். இருப்பினும் பல படங்களில் ஹீரோவாக நடித்தார்.
காசேதான் கடவுளடா படத்தில் நடிகர்கள் முத்துராமன், தேங்காய் சீனிவாசன் உடன் ஸ்ரீகாந்த். |
அதேசமயம் தன்னால் எந்த கதாபாத்திரமும் ஏற்று நடித்து அதற்கு பெருமை சேர்க்க முடியும் என்று நிரூபித்தவர் ஸ்ரீகாந்த். குறிப்பாக "எதிர் நீச்சல்" "பூவா தலையா" "பாமா விஜயம்" நவகிரகம் மற்றும் "காசேதான் கடவுளடா" போன்ற படங்களை இவருடைய நகைச்சுவை நடிப்பிற்கு சான்றாக கூறலாம்.
எதிர்நீச்சல் படத்தில் நடிகை சவுகார் ஜானகி உடன் ஸ்ரீகாந்த். |
1972 ஆம் ஆண்டு இயக்குநர் ஏ.சி.திருலோகச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த "அவள்" என்ற திரைப்படத்தின் மூலம் இவர் வில்லனாகவும் அறிமுகமானார். அதன் பின் தொடர்ச்சியாக பல படங்களில் வில்லன் கதாபாத்திரம் ஏற்று நடித்து வந்த நடிகர் ஸ்ரீகாந்துக்கு நடிகர் திலகம் சிவாஜி கணேசனோடு இணைந்து நடித்த தங்கப்பதக்கம் திரைப்படம் இவருடைய திரைப்பயணத்தில் ஒரு மைல் கல் எனலாம்.
நடிகை ராகினி உடன் ஸ்ரீகாந்த். |
இந்தப் படத்தில் இவர் ஏற்று நடித்த "ஜெகன்" என்ற கதாபாத்திரம் தமிழ் ரசிகர்களால் அவ்வளவு எளிதில் மறக்க இயலாது. எழுத்தாளர் ஜெயகாந்தனின் நாவல்களான "சில நேரங்களில் சில மனிதர்கள்" "ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்" "கருணை உள்ளம்" போன்ற படங்களில் நடிகர் ஸ்ரீகாந்த முக்கிய வேடமேற்று நடித்திருப்பது பெருமைக்குரிய ஒன்று.
படப்பிடிப்பு தளம் ஒன்றில் நடிகர் ரஜினி உடன் ஸ்ரீகாந்த். |
சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், ஜெய்சங்கர், முத்துராமன், சிவகுமார், கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் போன்ற அனைத்து முன்னணி நடிகர்களுடனும் இணைந்து நடித்த பெருமை மிக்கவர். இதுவரை இவர் எம்.ஜி.ஆரோடு மட்டும் இணைந்து நடிக்கவில்லை என்பது முக்கியமான ஒன்று.
கமல்ஹாசன் உடன் படப்பிடிப்பு தளத்தில் ஸ்ரீகாந்த் |
இயக்குநர் ஸ்ரீதர் தொடங்கி கே.பாலசந்தர், ஏ.பீம்சிங், ஏ.சி.திருலோகசந்தர், முக்தா ஸ்ரீனிவாசன், பி.மாதவன், கிருஷ்ணன் பஞ்சு மற்றும் எம்.ஏ.திருமுகம் என அனைத்து பெரும் இயக்குநர்களுடனும் பணியாற்றிய சிறப்பு பெற்றவர். சுமார் 200 படங்கள் வரை நடித்திருக்கும் நடிகர் ஸ்ரீகாந்த் நடிகர் என்ற எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாத அமைதிக்கு சொந்தக்காரர் என்பது மட்டும் உண்மை.
நடிகர்கள் ரஜினிகாந்த், விஜயன் உடன் ஸ்ரீகாந்த். |
ஸ்ரீகாந்த்திற்கு ஒரு மகள் மட்டுமே உள்ளார். சென்னையில் அவருடன் வசித்து வந்தார். நண்பகல் வாக்கில் அவர் இறந்துள்ளார். மாலையிலேயே அவரது இறுதிச்சடங்கு தேனாம்பேட்டையில் உள்ள மயானத்தில் நடந்தது.
நடிகர் ஸ்ரீகாந்த் நடிப்பில் வெளிவந்த குறிப்பிடும்படியான சில படங்கள்
1.வெண்ணிறாடை - கதாநாயகன்
2.நாணல் - துணை நடிகர்
3.செல்வமகள் - துணை நடிகர்
4.ஆலயம் - துணை நடிகர்
5.எதிர்நீச்சல் - துணை நடிகர்
6.பாமா விஜயம் - துணை நடிகர்
7.பூவா தலையா - துணை நடிகர்
8.நவகிரகம் - துணை நடிகர்
9.வியட்நாம் வீடு - துணை நடிகர்
10.நூற்றுக்கு நூறு - துணை நடிகர்
11.தங்க கோபுரம் - துணை நடிகர்
12.அன்னை வேளாங்கன்னி - துணை நடிகர்
13.பிராப்தம் - துணை நடிகர்
14.வீட்டுக்கு ஒரு பிள்ளை - துணை நடிகர்
15.காதலிக்க வாங்க - துணை நடிகர்
16.காசேதான் கடவுளடா - துணை நடிகர்
17.ஞான ஒளி - துணை நடிகர்
18.தெய்வம் - துணை நடிகர்
19.வசந்த மாளிகை - துணை நடிகர்
20.அவள் - துணை நடிகர்
21.கட்டிலா தொட்டிலா - துணை நடிகர்
22.பொன்வண்டு - துணை நடிகர்
23.கோமாதா என் குலமாதா - கதாநாயகன்
24.ராஜபார்ட் ரங்கதுரை - துணை நடிகர்
25.ஜீசஸ் - துணை நடிகர்
26.காசியாத்திரை - துணை நடிகர்
27.ஸ்கூல் மாஸ்டர் - துணை நடிகர்
28.வாணி ராணி - துணை நடிகர்
29.ராஜநாகம் - கதாநாயகன்
30.அத்தையா மாமியா - துணை நடிகர்
31.திக்கற்ற பார்வதி - கதாநாயகன்
32.அன்பைத் தேடி - துணை நடிகர்
33.பருவ காலம் - துணை நடிகர்
34.வெள்ளிக் கிழமை விரதம் - துணை நடிகர்
35.அன்புத் தங்கை - துணை நடிகர்
36.கை நிறைய காசு - துணை நடிகர்
37.வைரம் - துணை நடிகர்
38.தங்கப் பதக்கம் - துணை நடிகர்
39.திருமாங்கல்யம் - துணை நடிகர்
40.வாழ்ந்து காட்டுகிறேன் - துணை நடிகர்
41.ஆயிரத்தில் ஒருத்தி - துணை நடிகர்
42.வாழ்வு என் பக்கம் - துணை நடிகர்
43.மகராசி வாழ்க - துணை நடிகர்
44.அவன் ஒரு சரித்திரம் - துணை நடிகர்
45.ஒரு கொடியில் இரு மலர்கள் - துணை நடிகர்
46.கணவன் மனைவி - துணை நடிகர்
47.பயணம் - துணை நடிகர்
48.பேரும் புகழும் - துணை நடிகர்
49.சில நேரங்களில் சில மனிதர்கள் - கதாநாயகன்
50.பாலாபிஷேகம் - துணை நடிகர்
51.இளைய தலைமுறை - துணை நடிகர்
52.ஓடி விளையாடு தாத்தா - துணை நடிகர்
53.பெண்ணை சொல்லி குற்றமில்லை - துணை நடிகர்
54.உயர்ந்தவர்கள் - துணை நடிகர்
55.வட்டத்துக்குள் சதுரம் - துணை நடிகர்
56.அக்னி பிரவேசம் - துணை நடிகர்
57.ஒரு வீடு ஒரு உலகம் - துணை நடிகர்
58.பேர் சொல்ல ஒரு பிள்ளை - துணை நடிகர்
59.பைரவி - துணை நடிகர்
60.சிட்டுக்குருவி - துணை நடிகர்
61.சதுரங்கம் - துணை நடிகர்
62.ஸ்ரீகாஞ்சி காமாட்சி - துணை நடிகர்
63.ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் - கதாநாயகன்
64.சட்டம் என் கையில் - துணை நடிகர்
65.கருணை உள்ளம் - கதாநாயகன்
66.திரிபுர சுந்தரி - துணை நடிகர்
67.நீயா - துணை நடிகர்
68.லட்சுமி - துணை நடிகர்
69.கந்தர் அலங்காரம் - துணை நடிகர்
70.இனிக்கும் இளமை - துணை நடிகர்
71.மரியா மை டார்லிங் - துணை நடிகர்
72.எங்கள் வாத்தியார் - துணை நடிகர்
73.நதியை தேடி வந்த கடல் - துணை நடிகர்
74.ஒரே முத்தம் - துணை நடிகர்
75.எங்க ஊரு கண்ணகி - துணை நடிகர்
76.ருசி - துணை நடிகர்
77.ஒப்பந்தம் - துணை நடிகர்
78.டேவிட் அங்கிள் - துணை நடிகர்
79.தம்பிக்கு எந்த ஊரு - துணை நடிகர்
80.மனிதன் - துணை நடிகர்
81.நவக்கிரக நாயகி - துணை நடிகர்
82.அன்னை பூமி - துணை நடிகர்
83.முப்பெரும் தேவியர் - துணை நடிகர்
84.சொல்லத் துடிக்குது மனசு - துணை நடிகர்
85.மலரே குறிஞ்சி மலரே - துணை நடிகர்
86. கை வீசம்மா கை வீசு - துணை நடிகர்
87. அன்பு சங்கிலி - துணை நடிகர்
88. பாரதி - துணை நடிகர்
89. காதல் கொண்டேன் - துணை நடிகர்