என்னை ஏன் டார்கெட் செய்கிறார்கள் : கயாடு லோஹர் வேதனை | பெரிய சம்பளத்தை மட்டுமே எதிர்பார்த்து நான் நடிப்பதில்லை : தீபிகா படுகோனே விளக்கம் | ரன்வீர், சாரா நடித்துள்ள துரந்தர் பட டிரைலர் வெளியானது | ரஜினி படத்திலிருந்து விலகியதால் மீண்டும் கார்த்தியுடன் இணையும் சுந்தர்.சி | பாலகிருஷ்ணா 111வது படத்தில் ராணி ஆக நயன்தாரா | எம்புரான் விமர்சனம் : பிரித்விராஜ் கருத்து | மீண்டும் காமெடி ஹீரோவான சதீஷ் | ஒரே படத்தின் மூலம் தமிழுக்கு வரும் தெலுங்கு, மலையாள ஹீரோயின்கள் | டேனியல் பாலாஜியின் கடைசி படம்: 28ம் தேதி வெளியாகிறது | பிளாஷ்பேக்: சோகத்தில் வென்ற ரஜினிகாந்தும், தோற்ற விஜயகாந்தும் |

மோகன்லால் நடிப்பில் அடுத்ததாக தெலுங்கில் கண்ணப்பா, மலையாளத்தில் ஹிருதயபூர்வம் ஆகிய படங்கள் ரிலீஸுக்கு தயாராகி வருகின்றன.. வரும் அக்டோபர் மாதம் திரிஷ்யம் 3 படத்தில் நடிக்க இருக்கிறார். அதற்கு முன்னதாக தற்போது மகேஷ் நாராயணன் இயக்கத்தில் உருவாகி வரும் இன்னும் பெயரிடப்படாத படத்தில் மோகன்லால் நடித்து வருகிறார்.
13 வருடங்களுக்குப் பிறகு இந்த படத்தில் அவர் மம்முட்டியுடன் இணைந்து நடிக்கிறார். மேலும் பஹத் பாசில், குஞ்சாக்கோ போபன், நயன்தாரா ஆகியோரும் நடித்து வருகின்றனர். இதன் படப்பிடிப்பு கேரளா மட்டுமல்லாது தென்னிந்தியாவில் சில இடங்களிலும் சில வெளிநாடுகளிலும் நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் தற்போது இதன் எட்டாவது கட்ட படப்பிடிப்பு இலங்கையில் நடைபெற்று வருகிறது. இதன் படப்பிடிப்பில் மோகன்லால் கலந்து கொண்டு நடித்து வருகிறார். சில தினங்களுக்கு முன்பு இலங்கை வந்த மோகன்லாலை வரவேற்ற இலங்கை சுற்றுலாத்துறை தங்களது சோசியல் மீடியா பக்கத்தில் பேட்ரியாட் என்கிற படத்தில் நடிப்பதற்காக வரும் மோகன்லால் வரவேற்கிறோம் என்று குறிப்பிட்டு இருந்தனர். இன்னும் டைட்டில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாத நிலையில் இலங்கை சுற்றுலாத்துறை இந்த டைட்டிலை தாங்களாக வெளிப்படுத்தியது ஆச்சரியம் அளித்தது. இந்த நிலையில் இலங்கை சேனல் ஒன்றுக்கு மோகன்லால் அளித்த பேட்டியில் அவரும் தங்களது படத்தின் டைட்டில் பேட்ரியாட் தான் என்பதை உறுதி செய்தார்.