கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் | போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது | ரெட்ரோ டிரைலர் : விதவிதமாய் 'குக்' செய்துள்ள கார்த்திக் சுப்பராஜ் | அஜித் பிறந்த நாளில் 'வீரம்' மறு வெளியீடு | உடல்நலக்குறைவு எதனால் ஏற்பட்டது : ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட்ட தகவல் | 'மணி ஹெய்ஸ்ட்' பாதிப்பில் உருவானது கேங்கர்ஸ்: சுந்தர்.சி | பிளாஷ்பேக்: 100 படங்களுக்கு மேல் குழந்தை நட்சத்திரமாக நடித்த சுலக்ஷனா | பிளாஷ்பேக்: குருவாயூரப்பனை எழுப்பும் லீலாவின் குரல் | அஜித்திற்கு எப்போதும் நன்றிக்கடன் பட்டுள்ளேன் : ஆதிக் ரவிச்சந்திரன் | வாழ்க்கை அழகானது... வரும் வாய்ப்பை விட்டுவிடாதீர்கள் : ரெட்ரோ பட விழாவில் சூர்யா பேச்சு |
கன்னட நடிகர் தர்ஷன் சில மாதங்களுக்கு முன்பு தனது ரசிகரான ரேணுகா சுவாமி என்பவரை கொலை செய்தார் என குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தனது காதலியும் நடிகையுமான பவித்ரா கவுடா என்பவருக்கு ரேணுகா சுவாமி தொடர்ந்து ஆபாச குறுஞ்செய்தி அனுப்பி டார்ச்சர் கொடுத்தார் என்பதற்காக அவர் இந்த குற்றத்தில் ஈடுபட்டார் என சொல்லப்பட்டது.
நடிகை பவித்ரா கவுடா உட்பட 16 பேர் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டனர். பல மாதங்களாக ஜாமின் மறுக்கப்பட்டு வந்த நிலையில் கடந்த மாதம் அனைவருக்குமே நீதிமன்றம் ஜாமின் வழங்கியது. இதனைத் தொடர்ந்து பெங்களூருக்கு மைசூருக்கு அருகில் உள்ள தனது பண்ணை வீட்டில் சென்று வசித்து வருகிறார் தர்ஷன்.
இந்த பிரச்சனைக்கு முன்னதாக தனது மனைவி விஜயலட்சுமி உடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து இருந்தார் தர்ஷன். ஆனால் இந்த வழக்கில் தர்ஷனை வெளியே கொண்டு வருவதற்காக அவரது மனைவி விஜயலட்சுமி தான், கருத்து வேறுபாடுகளை மறந்து முனைப்புடன் செயல்பட்டு வந்தார். தர்ஷன் சிறையிலிருந்து வெளிவந்ததும் மனைவி விஜயலட்சுமி, மகன் வினீஷ் ஆகியோரும் தற்போது தர்ஷனுடன் தான் இந்த வீட்டில் இருக்கிறார்கள்.
இந்த சங்கராந்தி பண்டிகையை தனது குடும்பத்துடன் கொண்டாடி தனது ரசிகர்களுக்கும் வாழ்த்து கூறியுள்ளார் நடிகர் தர்ஷன். அவர் இப்படி குடும்பத்துடன் ஒன்றிணைந்து சந்தோசமாக பண்டிகையை கொண்டாடுவதை பார்த்து அவரது ரசிகர்கள், தங்களது பாஸ் திரும்பி வந்து விட்டார் என உற்சாகமாக கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.