காஞ்சனா 4 படத்தில் ராஷ்மிகா மந்தனா? | ரஜினி - கமலை இணைத்து படம் இயக்க ஆசைப்படும் கே.எஸ்.ரவிக்குமார் | என்னை பிரபலப்படுத்தாதீங்க... : அஜித் பேச்சு | சினிமாவில் பாலகிருஷ்ணா 50 : வாழ்த்திய ரஜினி | சமோசா மீது எனக்கு தனி லவ் : தமன்னா | ஜெயிலர் 2 பற்றி ஓவராக பேசி ஹைப் ஏற்ற விரும்பவில்லை : நெல்சன் | மாதம்பட்டி ரங்கராஜ் கொஞ்சி பேசும் வீடியோவை வெளியிட்ட ஜாய் கிரிசில்டா | அஜித் 64வது படம் தாமதமாகிறது...? | முதல் குழந்தை வீட்டிற்கு வருவதற்கு முன் ஆறு குழந்தைகளை பறிகொடுத்தேன் : சன்னி லியோன் | மோகன்லால் படத்தை விட கல்யாணியின் படம் காட்சிகள் அதிகரிப்பு |
நடிகர் விஜய் தேவரகொண்டா தெலுங்கு திரையுலகின் இளம் முன்னணி நடிகராக இருந்தாலும் தென்னிந்திய அளவில் அவருக்கு பரவலாக அதிக ரசிகர்கள் இருக்கவே செய்கின்றனர். குறிப்பாக விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா ஜோடி மற்றும் அவர்கள் இணைந்து நடித்த ஹிட்டான பாடல்கள் அனைத்து தரப்பு ரசிகர்களிடமும் ரொம்பவே பிரபலம். இந்த நிலையில் கவுதம் தின்னநூரி டைரக்சனில் விஜய் தேவரகொண்டா நடிக்கும் அவரது 12வது படத்தின் படப்பிடிப்பு தற்போது கேரளாவில் நடைபெற்று வருகிறது.
இதன் படப்பிடிப்பில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக கலந்து கொண்டு நடித்து வருகிறார் விஜய் தேவரகொண்டா. கிடைக்கும் ஓய்வு நேரங்களிலும் படப்பிடிப்பு இல்லாத சமயத்திலும் கேரள மலைப்பாதைகளில் ஜாக்கிங் செல்வது, உடற்பயிற்சி செய்வது ஆகியவற்றை வாடிக்கையாக வைத்துள்ளார். இந்த நிலையில் கேரளாவில் உள்ள 'ரவுடிஸ்' என்கிற விஜய் தேவரகொண்டாவின் ரசிகர் மன்றத்தினர் ஒரு ரசிகர் சந்திப்பிற்கு ஏற்பாடு செய்திருந்தனர். இதில் விஜய் தேவரகொண்டா கலந்து கொண்டு ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். இது குறித்த வீடியோ ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது.