இப்ப, தமிழ் சினிமாவில் டாப் 5 ஹீரோயின் யார் தெரியுமா? | சூர்யாவின் ‛கருப்பு' ரிலீஸ் எப்போது? | ராஷ்மிகாவின் ‛மைசா' படத்தில் இணையும் புஷ்பா 2 வில்லன் | பராசக்தி படப்பிடிப்பு முடிவடைந்தது | நவம்பர் 21-ல் ரீரிலீஸ் ஆகும் ப்ரண்ட்ஸ் | லாபத்தில் முதலில் நுழைந்த 'பைசன்' | தீபாவளிக்கு ஜனநாயகன் அப்டேட் ஏனில்லை | பொங்கலுக்கு நடிகர் சங்க கட்டடம் திறப்பு : விஷால் திருமணம் எப்போது | பிக்பாஸில் வந்து விட்டால் மட்டும் நடிகையாகி விட முடியாது: தர்ஷிகா | ஹீரோயின் ஆனார் 'அரண்மனை' ஹர்ஷா |
தெலுங்கு திரையுலகில் அளவில் குறிப்பிடத்தக்க இளம் முன்னணி நடிகராக வளர்ந்து விட்ட விஜய் தேவரகொண்டா தென்னிந்திய அளவில் ரசிகர்களால் விரும்பப்படும் நடிகராக மாறிவிட்டார். இதற்கு முன்னதாக இவரின் நடிப்பில் பேமிலி ஸ்டார் என்கிற படம் வெளியான நிலையில் இவர் நடிக்கும் 12வது படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கவுதம் தின்னூரி இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தின் அறுபது சதவீத படப்பிடிப்பு சமீபத்தில் இலங்கையில் நடைபெற்ற முடிவடைந்தது. தற்போது இதன் அடுத்த கட்ட படப்பிடிப்பு கேரளாவில் நடைபெற்று வருகிறது.
இதற்காக கேரளாவில் முகாமிட்டுள்ள விஜய் தேவரகொண்டா காலை நேரங்களில் அங்குள்ள மலைப்பகுதி சாலைகளில் ஜாக்கிங் செல்வதை வாடிக்கையாக வைத்துள்ளார். அப்படி தான் ஜாக்கிங் செல்லும் புகைப்படங்கள் வீடியோக்களையும் அங்குள்ள வன காவலர்கள் மற்றும் சில ரசிகர்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களையும் நமது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ளார் விஜய் தேவரகொண்டா.