ஆறு மாதங்கள் தள்ளிப் போனது 'இட்லி கடை' | கார் பார்க்கிங் பிரச்னை : பிக்பாஸ் பிரபலம் தர்ஷன் கைது | இந்தியன் 3 படத்தின் பணிகள் மீண்டும் துவங்கியது | இறுதி கட்டத்தில் 'லவ் மேரேஜ்' | பிளாஷ்பேக் : இந்தியன் பனோரமாவில் திரையிடப்பட்ட முதல் தமிழ்படம் | பிளாஷ்பேக் : லலிதா, பத்மினிக்காக காத்திருந்த ரசிகர்கள் | ஆஸ்கர் விருது வரை சென்ற 'லபாட்டா லேடீஸ்' படம் கதை காப்பி சர்ச்சையில் சிக்கியது | சினிமா ஆனது இந்தியாவின் முதல் மகாத்மாவின் வாழ்க்கை | 'பயர்' 50வது நாள் : சவாலான படங்களை தயாரித்து, இயக்க ஜே சதீஷ் குமார் முடிவு | ரத்தத்தால் அடா சர்மாவின் ஓவியம் வரைந்த ரசிகர் |
கடந்த சில தினங்களுக்கு முன்பு மலையாள திரை உலகில் ஹேமா கமிஷன் அறிக்கை வெளியாகி மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. வாய்ப்புக்காக நடிகைகள் அட்ஜஸ்ட் செய்து கொண்டு செல்லுமாறு நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள் என்றும் சம்பள முரண்பாடு உள்ளிட்ட பல விஷயங்களில் அவர்களுக்கு பாகுபாடு காட்டப்படுகிறது என்றும் ஹேமா கமிஷன் அறிக்கை தெளிவாக விளக்கி இருந்தது. இதனை தொடர்ந்து பல நடிகைகள் சில வருடங்களுக்கு முன்பு தாங்கள் சந்தித்த கசப்பான பாலியல் துன்புறுத்தல் அனுபவங்களை குற்றசாட்டாக, புகார்களாக பகிர்ந்து கொண்டு வருகின்றனர்.
இந்த விஷயத்தில் நடிகர் சங்கமும், இயக்குனர் சங்கமும் தான் பெரிய அளவில் அடிபட்டன. ஆனால் தற்போது மலையாள திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திலும் சலசலப்பு எழுந்துள்ளது. ஆனால் இது பாலியல் துன்புறுத்தலாக இல்லாமல் தயாரிப்பாளர்களை சங்கத்தின் தலைமை பொறுப்பில் இருப்பவர்கள் மதிப்பதில்லை என்றும் தலைமையில் புதிய மாற்றம் வர வேண்டும் என்றும் குரல் கொடுத்துள்ளார் பெண் தயாரிப்பாளரான சான்ட்ரா தாமஸ்.
கடந்த வருடம் பரபரப்பான பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான தயாரிப்பாளரும் நடிகருமான விஜய்பாபு என்பவருடன் இணைந்து படங்களை தயாரித்து வருகிறார் சான்ட்ரா தாமஸ். ஆனால் தயாரிப்பாளர் சங்கத்தின் மூலம் இணைந்து நடைபெறும் கலை விழாக்களுக்கு கூட 95 சதவீத தயாரிப்பாளர்களை அழைப்பதில்லை, எங்களுடைய பிரச்சனைகளை குறிப்பாக தயாரிப்பில் ஈடுபடும் பெண்களின் கஷ்டங்களை புரிந்து கொள்ள கூட முன்வருவதில்லை என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார். தற்போது மலையாள திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராக நடிகர் மம்முட்டியின் மிக நெருங்கிய நண்பரும் தயாரிப்பாளருமான ஆண்டோ ஜோசப் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.