‛‛திரும்பி போற ஐடியா இல்ல... ஐயம் கம்மிங்...'' : விஜயின் ‛ஜனநாயகன்' டிரைலர் வெளியீடு | ‛ஜனநாயகன்' சென்சார் சான்று தடுப்பது யாரோ.? | ‛தி ராஜா சாப்' திருப்புமுனையாக அமையும் : நிதி அகர்வால் நம்பிக்கை | பாக்யராஜ் 50 : முதல்வருக்கு அழைப்பு | பாலிவுட்டில் என்ட்ரி கொடுக்கும் கிர்த்தி ஷெட்டி | யு.கே-வில் பராசக்தி முன்பதிவு விவரம் | முதல்வர் தலைமையில் ரஜினி, கமல் கலந்து கொள்ளும் நிகழ்வு எது தெரியுமா | மவுன படமான ‛காந்தி டாக்ஸ்' ஜனவரி 30ல் ரிலீஸ் | ரஜினியுடன் அனிருத் இணையும் 7வது படம் | சாயா தேவியின் 'அலப்பறை' |

கன்னட திரையுலகின் பிரபல முன்னணி நடிகர் தர்ஷன். கடந்த மாதம் தனது ரசிகரான ரேணுகா சுவாமி என்பவர் தனது காதலியும் நடிகையுமான பவித்ரா கவுடாவுக்கு ஆபாச செய்திகள் அனுப்பி டார்ச்சர் கொடுத்தார் என்பதற்காக அவரை கொலை செய்தார் என குற்றம் சாட்டப்பட்டு கைதாகி சிறையில் அடைக்கப்பட்டார். அவருடன் நடிகை பவித்ரா கவுடா உள்ளிட்ட 15க்கும் மேற்பட்டோர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். தற்போது வரை தர்ஷனுக்கு ஜாமீன் கிடைப்பதில் இழுபறி ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில் தர்ஷனிடம் இருந்து சில வருடங்களாகவே ஒதுங்கி இருந்த அவரது மனைவி விஜயலட்சுமி தற்போது தனது கணவரின் வழக்கில் தீவிரம் காட்டி வருகிறார்.
அவ்வப்போது சிறைக்கு சென்ற தர்ஷனை சந்தித்து வரும் விஜயலட்சுமி விரைவில் அவருக்கு ஜாமீன் கிடைக்க வேண்டும் என்பதற்காகவும் இந்த வழக்கில் இருந்து விடுபட்டு விடுதலையாக வேண்டும் என்பதற்காகவும் சமீபத்தில் கொல்லூரில் உள்ள மூகாம்பிகை கோவிலுக்கு சென்று ஒரு ஹோமம் நடத்தியுள்ளார். பின்னர் அங்கிருந்து கோவில் பிரசாதத்துடன் நேரடியாக சிறைக்கு சென்று தனது கணவர் தர்ஷனை சந்தித்துள்ளார். அந்த வகையில் தனது கணவர் இன்னொரு பெண்ணிடம் உள்ள நெருக்காதால் தன்னிடம் பாராமுகம் காட்டி தன்னை ஒதுக்கி வைத்த நிலையிலும் தர்ஷனின் மனைவி கணவனுக்காக சட்டப் போராட்டத்தில் இறங்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.