100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் மூக்குத்தி அம்மன் 2 : படத்தில் நடிப்பவர்கள் விபரம் | பாலிவுட்டை விட்டு விலக முடிவெடுத்த அனுராக் காஷ்யப் | என் பணியை சிறப்பாக செய்ய முயற்சிக்கிறேன் - கஜராஜ் ராவ் | விஷ்ணு விஷாலுக்கு வில்லன் ஆன செல்வராகவன்! | அடுத்த மாதம் 'ஜெயிலர் 2' படப்பிடிப்பு துவங்குகிறது | ராம்சரண் படத்திற்கு தயாரான சிவராஜ் குமார்! | நாகார்ஜூனா உடன் நடனமாடும் பூஜா ஹெக்டே! | பிளாஷ்பேக் : மோகன் கையில் மைக்கை கொடுத்த இயக்குனர் | பிளாஷ்பேக் : மறக்கடிக்கப்பட்ட மகா கலைஞன் கொத்தமங்கலம் சீனு | கோவில்களில் சினிமா பாட்டு பாட நீதிமன்றம் தடை |
பிரபல பாலிவுட் இயக்குனரும் நடிகருமான அனுராக் காஷ்யப் தென்னிந்திய மொழி திரைப்படங்கள் மீது தனிப்பிரியம் கொண்டவர். தமிழில் நல்ல படங்கள் வரும்போது தனது பாராட்டுகளை தவறாமல் தெரிவித்து வருபவர். கடந்த சில வருடங்களுக்கு முன்பு நயன்தாரா, விஜய் சேதுபதி நடித்த இமைக்கா நொடிகள் என்கிற படத்தில் வில்லனாக நடித்து தமிழ் ரசிகர்களுக்கும் நன்கு அறிமுகமானார். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு வெளியான லியோ திரைப்படத்தில் ஒரு நிமிடமே வந்து போகும் காட்சியில் நடித்திருந்தார். அதையடுத்து தற்போது சுந்தர்.சியுடன் 'ஒன் டூ ஒன்' என்கிற படத்தில் வில்லனாக நடித்து வருகிறார்.
இந்த நிலையில் அடுத்ததாக மலையாள திரையுலகிலும் அடி எடுத்து வைக்கிறார் அனுராக் காஷ்யப். கடந்த சில நாட்களாக கேரளாவில் நடைபெற்று வரும் கேரள சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்று வரும் அனுராக் காஷ்யப் கேரளா மீடியாக்களிடம் பேசும்போது, “நான் மலையாள படம் ஒன்று நடிக்க இருக்கிறேன். வரும் ஜனவரி மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்க இருக்கிறது. படத்தின் இயக்குனரிடம் நான் என்ன கதாபாத்திரம் செய்கிறேன் என்றெல்லாம் கேட்கவில்லை. ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறேன்” என்று கூறியுள்ளார்.