படப்பிடிப்பில் ராஷி கண்ணா காயம் | மீண்டும் லாயர் ஆகிறார் விஜய் ஆண்டனி | டெரர் போலீஸ் அதிகாரியாக சாய் தன்ஷிகா | பிளாஷ்பேக்: மோகனுக்கு குரல் கொடுத்த கமல் | பிளாஷ்பேக்: 75 ஆண்டுகளுக்கு முன்பே 'அவருக்கு பதில் இவர்' | ஐதராபாத்தில் ஆரம்பமாகும், நடக்கும் தமிழ் சினிமா…. இதுதான் தமிழ்ப்பற்றா ? | மம்முட்டி - கவுதம் மேனன் பட ஓடிடி ரிலீஸ் தாமதம் ஏன் ? | மதுபாலாவின் 'சின்ன சின்ன ஆசை': வெளியிட்ட மணிரத்னம் | மோகன்லால் பிறந்தநாள் பரிசாக பலாப்பழ ஓவியம் வரைந்த ஓவியர் | சொல்லாமல் விலகிய பாலிவுட் நடிகர் மீது 25 கோடி நஷ்ட ஈடு கேட்டு அக்ஷய் குமார் வழக்கு |
மலையாள திரையுலகில் கடந்த சில வருடங்களாகவே சாதாரண படமாக சிறிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படங்கள் எதிர்பாராத விதமாக ரசிகர்களின் வரவேற்பை பெற்று 50 கோடி, 100 கோடி வசூலித்து ஆச்சரியப்படுத்துவது வாடிக்கையாகி விட்டது. கடந்த வருடம் அப்படி வெளியான ரோமாஞ்சம் என்கிற ஹாரர் காமெடி படமும், ஜெய ஜெய ஜெய ஜெய ஹே என்கிற குடும்பப்பாங்கான படமும் முறையே 50 கோடி மற்றும் 100 கோடி வசூல் கிளப்பில் இணைந்தன.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மலையாளத்தில் வெளியான ஆர்டிஎக்ஸ் என்கிற திரைப்படம் அதேபோன்ற வரவேற்பை ரசிகர்களிடம் பெற்று தற்போது 80 கோடி வசூலித்துள்ளது. விரைவில் இந்தப்படம் 100 கோடி வசூல் கிளப்பிலும் இணையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட துல்கர் சல்மானின் கிங் ஆப் கொத்தா படத்தை எல்லாம் ஓவர்டேக் செய்து விட்டது.
இத்தனைக்கும் இந்த படத்தை நகாஸ் ஹிதாயத் என்கிற அறிமுக இயக்குனர் தான் இயக்கி இருந்தார். ரொம்பவும் பிரபலம் ஆகாத அதே சமயம் வளர்ந்து வரும் இளம் நடிகர்களான ஷேன் நிகம், ஆண்டனி வர்கீஸ், நீரஜ் மாதவ் என்கிற மூன்று கதாநாயகர்கள் இந்த படத்தில் இணைந்து நடித்துள்ளனர். மார்ஷியல் ஆர்ட்ஸ் பின்னணியில் அதிரடி சண்டைக்காட்சிகளுடன் ஒரு விறுவிறுப்பான ரிவெஞ்ச் திரில்லராக இந்த படம் உருவாகி இருந்தது.
மகிமா நம்பியார் கதாநாயகியாக நடித்துள்ள இந்த படத்திற்கு வித்தியாசமான முறையில் சண்டைக் காட்சிகளை வடிவமைத்திருந்தனர் அன்பறிவ் சகோதரர்கள். தற்போது இந்த படத்தின் ரீமேக் உரிமையை வாங்க தமிழ், தெலுங்கில் சில முன்னணி நிறுவனங்கள் முயற்சித்து வருவதாக சொல்லப்படுகிறது.