கமல்ஹாசன் உடன் இணைந்து நடிக்க ஆசைப்படும் மிருணாள் தாகூர் | ஜெய் ஜோடியாக மீனாட்சி கோவிந்தராஜன் : காதல், திரில்லர் படமாக உருவாகிறது | அஜித்தின் அடுத்த படத்தை இயக்குகிறாரா தனுஷ்? | சர்ச்சையை கிளப்பிய நானியின் டாட்டூ வார்த்தை | கதாநாயகனாக மாறிய பிரேமலு காமெடி நடிகர் | அய்யப்பனும் கோஷியும் இயக்குனரின் கனவு படத்தை நிறைவு செய்த பிரித்விராஜ் | கூலி பட டீசர் மார்ச் 14ல் வெளியாவதாக தகவல் | அமரன் படத்துக்கு கிடைத்த சர்வதேச அங்கீகாரம் | ஐதராபாத்தில் சூர்யா 45வது படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு | கேங்கர்ஸ் படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு |
கடந்த வருடம் வெளியான தி காஷ்மீர் பைல்ஸ் மற்றும் சமீபத்தில் வெளியான கேரள ஸ்டோரி என பயங்கரவாதத்திற்கு எதிரான கருத்து கொண்ட படங்கள் வெளியாகும் போதெல்லாம் நாடெங்கிலும் பல இடங்களில் அந்த படங்களுக்கு எதிர்ப்பும் கடும் சர்ச்சையும் உருவாவது வாடிக்கையாகி விட்டது. குறிப்பாக இது போன்ற படங்களை இஸ்லாமியர்களுக்கு எதிரான படங்கள் போல சிலர் சித்தரித்து வருவது தான் காரணம். அந்த வகையில் தற்போது இதே கருத்தை மையப்படுத்தி உருவாகியுள்ள 72 ஹூரைன் என்கிற படத்திற்கும் இதேபோன்று சிக்கல்களும் எதிர்ப்புகளும் எழுந்துள்ளன.
இந்த படம் எப்படி அப்பாவி இளைஞர்கள் மூளைச்சலவை செய்யப்பட்டு பயங்கரவாத இயக்கத்திற்குள் இழுக்கப்படுகின்றனர் என்பதை மையப்படுத்தி உருவாகியுள்ளது. இந்த படத்தை இயக்குனர் சஞ்சய் பூரன் சிங் சவுகான் என்பவர் இயக்கியுள்ளார். இந்த படத்திற்கு சென்சார் சான்றிதழ் பெறுவதிலேயே பெரிய சிக்கல் எழுந்தது. ஒருவழியாக இந்த படம் வரும் ஜூலை 7ம் தேதி வெளியாக இருக்கிறது.
இன்னொரு பக்கம் இந்த படத்தை திரையிடக்கூடாது என காஷ்மீர் பகுதியில் உள்ள சில இஸ்லாமிய அமைப்புகள் போர்க்கொடி தூக்கி வருகின்றன. இந்த நிலையில் வரும் ஜூலை 4ம் தேதி இந்த படம் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் சிறப்புக் காட்சியாக திரையிட்டு காட்டப்பட இருக்கிறது. இந்த திரையிடலுக்குப் பிறகு என்ன சர்ச்சைகள் கிளம்புமோ என ஒரு பரபரப்பு இப்போதே எழுந்துள்ளது.