வன்முறை, ரத்தம் தெறிக்கும் காட்சிகள் : ரஜினியின் 'கூலி' படத்திற்கு ‛ஏ' சான்று | பிரதீப் ரங்கநாதன் பாணியில் அபிஷன் ஜீவிந்த் நாளை மறுநாள் ஹீரோ ஆகிறார் | பிட்னஸ் ரகசியத்தை வெளியிட்ட சமந்தா | ஜெயிலர் 2 படப்பிடிப்பு : மீண்டும் கேரளா செல்லும் ரஜினி | 3 விருதுகளை வென்ற ‛பார்க்கிங்' : ஷாரூக்கான், ராணி முகர்ஜி, ஜிவி பிரகாஷிற்கு தேசிய விருது | ஒரே நாளில் இரண்டு இலங்கைத் தமிழ் ஹீரோக்களின் படங்கள் ரிலீஸ் | அமெரிக்காவில் ஜேசுதாஸை சந்தித்த ஏஆர் ரஹ்மான் | டிரண்டாகும் மதராஸி படத்தின் சலம்பல பாடல் | கூலியால் தள்ளிப்போன எல்ஐகே பட அறிவிப்பு | மோகன்லால் பட இயக்குனரின் படத்தில் நடிக்கும் கார்த்தி |
மலையாள திரையுலகில் கிட்டத்தட்ட 40 வருடங்களாக தற்போதும் முன்னணி வரிசை இயக்குனராக பயணித்து வருபவர் இயக்குனர் பிரியதர்ஷன். 100க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியுள்ள பிரியதர்ஷினின் படங்கள் அனைத்துமே காமடியை பிரதானமாக கொண்டு உருவான படங்கள் தான். இன்னும் அவரது படங்களில் நடித்த காமெடி கதாபாத்திரங்கள் பல, ரசிகர்கள் மனதில் உயிர்ப்புடன் நடமாடி வருகின்றன. இந்த நிலையில் தற்போது கொரோனா பேப்பர்ஸ் என்கிற படத்தை இயக்கியுள்ளார் பிரியதர்ஷன். இந்த படம் நேற்று வெளியாகி உள்ளது. நீண்ட நாட்கள் கழித்து கிரைம் திரில்லர் பானியில் இந்த படத்தை உருவாக்கியுள்ளார் பிரியதர்ஷன்.
இது குறித்து அவர் கூறும்போது, “இனிவரும் காலங்களில் நான் காமெடி படங்களை இயக்கப் போவதில்லை என முடிவு செய்துள்ளேன். காரணம் முன்பு எனது படங்களில் பக்கபலமாக இருந்த நெடுமுடி வேணு, திலகன் இன்னொசென்ட், குதிரை வட்டம் பப்பு உள்ளிட்ட முக்கிய நடிகர்கள் இன்று என்னுடன் (உயிருடன்) இல்லை. இதனால் நான் கொஞ்சம் பாதுகாப்பு இல்லாதவன் போல தான் உணர்கிறேன். அதுமட்டுமல்ல இப்போதைய தலைமுறைக்கு இதுபோன்ற காமெடிகளை கடத்துவதில் சிரமம் இருக்கிறது. அதனால் தான் வெவ்வேறு ஜானர்களில் என்னுடைய படங்களை முயற்சித்துப் பார்க்கப் போகிறேன்” என்று கூறியுள்ளார் பிரியதர்ஷன்.