ஜேசன் சஞ்சய், சந்தீப் கிஷன் பட ரிலீஸ் எப்போது? | எங்களை பிரித்தது அந்த மூன்றாவது நபரே : கெனிஷாவை சாடும் ஆர்த்தி ரவி | ஹிந்தி பட ரீமேக்கில் நடிக்கும் துருவ் விக்ரம் | சந்தானத்தை பின்னுக்கு தள்ளிய சூரி | அமெரிக்காவில் தெலுங்கு கலாச்சார விழாவில் பங்கேற்கும் அல்லு அர்ஜுன் | ''எல்லாமே முதன்முறை... பிகினியும் கூட...'': 'வார் 2' பற்றி கியாரா அத்வானி | மணிரத்னம் படத்தில் ருக்மணி வசந்த் | ஆதி படத்தில் இணையும் மிஷ்கின்? | மே 23ம் தேதியிலும் அதிகப் படங்கள் ரிலீஸ் | வழக்கமான கதாபாத்திரங்களில் நடிக்க விரும்பவில்லை : பிக்பாஸ் அர்ச்சனா |
தமிழ் சினிமாவில் மட்டும் 211 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார் சம்பத் ராம். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, ஆங்கிலம் என்று பல மொழிகளில் பல வேடங்களில் நடித்து வரும் இவர் தற்போது 25ம் ஆண்டு சினிமா பயணத்தை தொடர்ந்து கொண்டிருக்கிறார்.
சமீபத்தில் வெளியான மலையாளப் படமான மாளிகப்புரத்தில் மெயின் வில்லனாக நடித்துள்ளார். அவர் கூறியதாவது: கமல் சாருடன் விக்ரம் படத்தில் நான் சிறு வேடத்தில் நடித்திருந்தேன். அதை பார்த்துவிட்டு தான் மாளிகப்புரம் தயாரிப்பாளர் இந்தப்பட வாய்ப்பை வழங்கினார். மலையாளத்தில் எனக்கு இது 6வது படம். என் முதல் படமே மோகன்லால் படம்தான், அதில் முக்கிய வில்லனாக நடித்தேன். பிறகு மம்முட்டி சார் என மலையாளத்தில் இதுவரை நான் நடித்த 6 படங்களும் பெரிய பெரிய நடிகர்கள் படங்கள்தான்.
மலையாள திரையுலகம் எப்போதும் தமிழ் கலைஞர்களை மதிக்கிறது. இதனை நான் அனுபபூர்வமாக உணர்ந்திருக்கிறேன். கசக்கி பிழிகிற அளவிற்கு வேலை வாங்க மாட்டார்கள். படப்பிடிப்பை திட்டமிட்டு நடத்துவார்கள். எனக்கு தமிழில் வாங்கும் சம்பளத்தை விட இரண்டு மடங்கு அதிக சம்பளம் தந்தார்கள்.
தற்போது காசரகோட், சாலமன், தங்மணி என 3 மலையாள படங்களில் நடித்து வருகிறேன். கே.ஜி.எப் இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில், பிரபாஸ் நடித்து வரும் சலார், நேனே நான் ஆகிய தெலுங்கு படங்களில் நடிக்கிறேன். தமிழில் வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை, விக்ரம் நடிக்கும் தங்கலான், கட்டில், கங்கனம், சூர்ப்பனகை ஆகிய படங்களோடு, தி கிரேட் எஸ்கேப் மற்றும் தி பேர்ல் பிளட் என்ற ஆங்கிலப் படங்களிலும் நடிக்கிறேன். வீரப்பன் இணைய தொடரிலும் நடிக்கிறேன்.
இவ்வாறு சம்பத் ராம் கூறினார்.