தீபாவளி தினத்தில் சூர்யாவும், கார்த்தியும் நேரடியாக மோதிக் கொள்கிறார்களா? | 'விடாமுயற்சி'யை விட 'குட் பேட் அக்லி' குறைவான டிக்கெட் புக்கிங்! | நளினியுடன் இணைந்தது உண்மையா? நடிகர் ராமராஜன் விளக்கம் | குட் பேட் அக்லி - அனைத்து 'அக்லி' வார்த்தைகளையும் 'கட்' செய்த சென்சார் | ஜப்பானில் வெளியாகும் சிம்புவின் 'மாநாடு' | ஒரே படத்துடன் வெளியேற என் அம்மா தான் காரணம் ; மனம் திறந்த மம்முட்டி பட நடிகை | தாத்தா ஆனார் பிரியதர்ஷன் : கல்யாணியின் பிறந்தநாளில் வெளிப்பட்ட உண்மை | இரண்டு மாதத்திற்கு பிறகு ஸ்ரேயா கோஷலின் எக்ஸ் கணக்கு மீட்பு | ஷாருக்கான் மகளுக்கு அம்மாவாக நடிக்கும் தீபிகா படுகோன் | பின்சீட்டில் அமர்பவர்களும் சீட் பெல்ட் அணியுங்கள் : சோனு சூட் உருக்கமான வேண்டுகோள் |
பாலிவுட் படமான 'மெட்ராஸ் கபே' மூலம் சினிமாவில் அறிமுகமானவர் ராஷி கண்ணா. தற்போது தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக இருக்கிறார். தற்போது தனுசுடன் 'திருச்சிற்றம்பலம்', கார்த்தியுடன் 'சர்தார் ' படங்களில் நடித்து வருகிறார். விஜய் சேதுபதியுடன் பார்ஸி என்ற வெப் தொடரிலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில், தெலுங்கில் ராஷி கண்ணா, நடித்த 'பக்கா கமர்ஷியல்' என்ற படம் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக ராஷி கண்ணா திருப்பதி சென்றார். அங்கு ஏழுமலையானை பக்தி பரவசத்துடன் தரிசித்தவர் பின்னர் அன்னதான மையத்திற்கு சென்று ஆயிரம் பேருக்கு தன் கையால் அன்னதானம் வழங்கினார். கோபிசந்த், சத்யராஜ் நடித்திருக்கும் பக்கா கமர்ஷியல் படம் ஓரளவுக்கு நல்ல வரவேற்புடன் ஓடத் தொடங்கி இருக்கிறது.