ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
தமிழ் திரையுலகில் மட்டுமல்லாது தென்னிந்தியத் திரையுலகமே ஆவலுடன் எதிர்பார்த்திருந்த விக்னேஷ் சிவன் - நயன்தாரா திருமணம் நேற்று மகாபலிபுரத்தில் ஒரு ஹோட்டலில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் இருவரின் குடும்ப உறவுகளும் மிக நெருங்கிய நண்பர்களுக்கும் மட்டும்தான் அழைப்பு என்று சொல்லப்பட்டாலும் திரையுலகைச் சேர்ந்த முக்கியஸ்தர்கள் பலரும் நேரில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி உள்ளனர்.
அதேசமயம் மலையாள திரையுலகில் இருந்து நடிகர் திலீப் இந்த திருமணத்துக்கு நேரில் வந்து கலந்து கொண்டது பலருக்கும் மிகப்பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. சொல்லப்போனால் மலையாள திரையுலகில் இருந்து கலந்து கொண்ட பிரபலம் திலீப் மட்டுமே என்று கூட சொல்லலாம்.
நயன்தாரா தமிழில் பிஸியாக நடித்துக் கொண்டிருந்த சமயத்தில் 2008ல் நடிகர் சங்கத்திற்காக திலீப் தயாரித்த டுவென்டி-2௦ என்கிற படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் ஆடினார் நயன்தாரா. அது திலீப் மீது அவர் வைத்திருந்த மரியாதை காரணமாகத்தான் என்று அப்போது சொல்லப்பட்டது. அதைத்தொடர்ந்து 2010ல் மலையாளத்தில் வெளியான பாடிகார்ட் என்கிற படத்தில் திலீப்புக்கு ஜோடியாக நடித்தார் நயன்தாரா. இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. மற்ற தென்னிந்திய மொழிகள் மட்டுமல்லாது பாலிவுட்டிலும் ரீமேக் செய்யப்பட்டு எல்லா இடங்களிலும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
இதையடுத்து கடந்த 2015 ஜீத்து ஜோசப் இயக்கத்தில் திலீப் நடித்த லைப் ஆப் ஜோஸுட்டி என்ற படத்தில் கிளைமாக்சில் இரண்டு நிமிடங்கள் மட்டுமே வந்து போகும் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார் நயன்தாரா. தென்னிந்திய மொழிகளில் குறிப்பாக தமிழ் தெலுங்கில் பீக்கில் இருக்கும் நயன்தாரா அந்த சமயத்தில் மலையாள திரைப்படத்தில் எந்த படங்களிலும் கதாநாயகியாக நடிக்காத நிலையில் திலீப் படத்தில் இப்படி கெஸ்ட் ரோலில் நடித்து இருந்தது அப்போது ஆச்சரியமாக பேசப்பட்டது.
அதுவும் திலீப்பின் மீதான மரியாதை மற்றும் நட்பு காரணமாகத்தான் என்பது இப்போது திலீப்புக்கு மட்டும் அவர் திருமணத்தில் கலந்துகொள்ள அழைப்பு அனுப்பி உள்ளதன் மூலம் உறுதியாகியுள்ளது. சமீபகாலமாக பிரபல நடிகை கடத்தப்பட்ட வழக்கில் மலையாள முன்னணி நடிகைகள் பலரும் திலீப்புக்கு எதிரான மனநிலையில் இருக்க அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் நட்பை மட்டுமே நயன்தாரா மனதில் வைத்துள்ளார் என்பதும் இதில் தெளிவாகியுள்ளது.