2025ல் அதிக சம்பளம் வாங்கும் தென்னிந்திய நடிகை யார் ? | மும்பையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளை விற்பனை செய்த பிரியங்கா சோப்ரா! | ரெட்ரோ படம் சூர்யாவுக்கு மகிழ்ச்சி கொடுத்துள்ளது! - கார்த்திக் சுப்பராஜ் | 500 கோடி நிகர வசூலைக் கடந்த 'ச்சாவா' | சினிமா துறையில் பாலின பாகுபாடு: மாதுரி தீக்சித் கவலை | பிரபு, வெற்றி இணைந்து நடித்து ரிலீசுக்கு தயாரான 'ராஜபுத்திரன்' | 'ஹிட் 3' பார்க்காதீர்கள்: நானி சொன்ன காரணம் தெரியுமா? | ''ரசிகர்கள் மாறிவிட்டாங்க...'': ஷில்பா ஷெட்டி | 'அவள்' பட இயக்குனருடன் இணைகிறாரா ரவி மோகன்? | பராசக்தி இந்த காலகட்டத்திற்கு பொருந்தும்! - ஆகாஷ் பாஸ்கரன் |
படம் : ப்ரண்ட்ஸ்
வெளியான ஆண்டு : 2001
நடிகர்கள் : விஜய், சூர்யா, தேவயானிஇயக்கம் : சித்திக்
தயாரிப்பு : ஸ்வர்கசித்ரா
இன்றைய மறக்க முடியுமாவில், நேசமணியின், ப்ரண்ட்ஸ்! ஆம்... இப்படத்தில் விஜய், சூர்யா, ரமேஷ் கண்ணா, ராதாரவி உட்பட பலர் இருந்தாலும், காமெடியில் அடித்து துவம்சம் பண்ணியது, நம்ம 'காண்ட்ராக்டர் நேசமணி' வடிவேலு தான்.
கடந்த, 2001 பொங்கலுக்கு வெளிவந்த இப்படம், பெரும் வெற்றிப் பெற்றது. நேருக்கு நேர் படத்திற்கு பின், இப்படத்தில் தான், விஜய்யும், சூர்யாவும் இணைந்து நடித்தனர். படத்தின் விளம்பரத்தில், சூர்யாவிற்கு உரிய முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை என்பது, அப்போது சர்ச்சையை கிளப்பியது.
கடந்த, 1999ல், சித்திக் இயக்கத்தில் வெளியான, ப்ரண்ட்ஸ் என்ற மலையாளப் படத்தைத் தழுவி, தமிழில் உருவானது. இப்படத்தையும், சித்திக் தான் இயக்கியிருந்தார். இப்படத்தில் ஜோதிகாவும், சுவலட்சுமியும் நடிக்கவிருந்தனர். பின், தேவயானியும், புதிய முகமான விஜயலட்சுமியும் இடம் பெற்றனர்.
விஜய், சூர்யா, ரமேஷ்கண்ணா ஆகியோர் நண்பர்கள். இதை உடைக்க முயற்சிக்கும் நபர்களால் ஏற்படும் விபரீதங்கள் தான், படத்தின் திரைக்கதை. துறுதுறு துள்ளளும், குற்றஉணர்ச்சியும் உடைய அரவிந்தன் கதாபாத்திரத்தில் விஜய் சிறப்பாக நடித்திருந்தார். ஆனாலும், கிளைமேக்ஸ் விஜயைத் தான், ஏற்க முடியவில்லை.
மலையாளப் படத்திற்கு இசை அமைத்த இளையராஜா தான், தமிழிலும் இசை அமைத்தார். அனைத்துப் பாடல்களையும் பழனிபாரதி எழுதியிருந்தார். 'தென்றல் வரும் வழியை, குயிலுக்குக் கூ கூ, ருக்கு ருக்கு, மஞ்சள் பூசும், பெண்களோட போட்டி...' பாடல்கள் ரசிக்க செய்தன.
வயிறு வலிக்க சிரிக்க ப்ரண்ட்ஸ் படத்தை எத்தனை முறை வேண்டுமானாலும் பார்க்கலாம்.ப்ரண்ட்ஸ் வழியே, தமிழர் நெஞ்சங்களில் நேசமணிக்கு என்றும் இடம் உண்டு.