அல்லு அர்ஜுன் - அட்லி படத்தில் நெகட்டிவ் ரோலில் ராஷ்மிகா மந்தனா? | மீண்டும் காப்பி சர்ச்சையில் சிக்கிய அனிருத்! | வேள்பாரி நாவல்: ஷங்கருக்கு எதிராக வெளியான ட்ரோல்கள்! | விஜய் சேதுபதி படத்தில் வில்லி வேடத்தில் தபு! | ஐபிஎல் போட்டி நேரத்திற்கு இணையாக ‛பாகுபலி தி எபிக்' ரன்னிங் டைம் | மோகன்லால் உடன் நடிக்க விருப்பம்: நடிகை ஷில்பா ஷெட்டி | விஜய் சேதுபதியின் தங்கை கதாபாத்திரம்: நடிகை ரோஷினி நெகிழ்ச்சி | கோட்டா சீனிவாச ராவ் மறைவு: தெலுங்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் | வலிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை! அனுபவம் பேசும் கவிஞர் பா.விஜய் | இயக்குனரிடம் நிபந்தனை போட்ட அமரன் |
பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவர் பிரியங்கா சோப்ரா. அமெரிக்க பாடகரும், நடிகருமான நிக் ஜோனஸைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது கணவருடன் அமெரிக்காவில் வசித்து வருகிறார் பிரியங்கா.
சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவ்வாக இருக்கும் சினிமா பிரபலங்களில் இவரும் ஒருவர். அவ்வப்போது தன்னைப் பற்றிய ஏதாவது அப்டேட் ஒன்றை வெளியிட்டுக் கொண்டேயிருப்பார்.
நேற்று அசத்தலான கவர்ச்சி ஆடையுடன் சில படங்களைப் பதிவிட்டு இன்ஸ்டாகிராமில் உள்ள இளைஞர்களை வசீகரித்திருக்கிறார். அந்தப் படங்களுக்கு மட்டும் 28 லட்சத்திற்கும் மேற்பட்ட லைக்குகள் கிடைத்துள்ளன.
அப்படி லைக்குகளை அள்ளித் தெளித்தவர்கள் ரசிகர்கள் மட்டுமல்ல, பாலிவுட் சினிமா பிரபலங்களும் தான். திருமணமான பின்னும் இப்படி கவர்ச்சிப் புகைப்படங்களை அள்ளித் தெளிக்கிறாரே என பாலிவுட் இளம் நடிகைகள் கோவத்துடன் தான் இருப்பார்கள்.