அருந்ததி படம் ஹிந்தியில் ரீமேக் ஆகுவது உறுதி! | வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் படத்தின் கதாநாயகி யார் தெரியுமா? | பிரபாஸ் படத்தில் பிரபல வெளிநாட்டு ஆக்சன் ஹீரோ? | விக்ரம் 63வது படத்தின் புதிய அப்டேட்! | அட்லி, அல்லு அர்ஜுன் படத்தில் இணைந்த மிருணாள் தாகூர்! | பென்ஸ் படத்தில் லாரன்ஸூக்கு ஜோடி இல்லையா? | இளன் இயக்கி, நடிக்கவுள்ள கதாநாயகி யார் தெரியுமா? | ஜூடோபியா : 9 ஆண்டுகளுக்கு பிறகு வரும் 2ம் பாகம் | 'தாரணி'யில் நடிகையின் கதை | போஸ் வெங்கட்டின் ஸ்போர்ட்ஸ் மூவி |

தங்கலான் படத்தை அடுத்து பா.ரஞ்சித் இயக்கி வரும் படம் வேட்டுவம். சில தினங்களுக்கு முன்பு இந்த படத்தின் சண்டைக்காட்சி படமாக்கப்பட்டு வந்தபோது அதில் நடித்த ஸ்டன்ட் மேன் மோகன்ராஜ் என்பவர் உயிரிழந்தார். ரிஸ்க்கான சண்டைக் காட்சியில் நடித்தபோது இது நிகழ்ந்துள்ளது. அதையடுத்து அப்படத்தின் இயக்குனர் பா.ரஞ்சித் உள்ளிட்ட மூன்று பேர் மீது கீழையூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளார்கள்.
இந்த நிலையில் இந்த செய்தியை அறிந்த பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் ஒரு அருமையான விஷயத்தை செய்துள்ளார். அது என்னவென்றால், நாடு முழுவதும் உள்ள 650 ஸ்டன்ட் நடிகர்களுக்கு அவர் இன்சூரன்ஸ் எடுத்துக் கொடுத்துள்ளார். இது குறித்த தகவல் வெளியானதை அடுத்து சினிமா வட்டாரங்களில் இருந்து நடிகர் அக்ஷய் குமாருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.