பழம்பெரும் பாலிவுட் நடிகை சந்தியா சாந்தாராம் காலமானார் | ரஜினி திடீர் இமயமலை பயணம் | ஆக்ஷன் ஹீரோயினாக விரும்பும் அக்ஷரா ரெட்டி | பிளாஷ்பேக்: 400 படங்களில் நடித்த கோவை செந்தில் | 300 கோடி வசூல் சாதனை புரிந்த 'லோகா' | பிளாஷ்பேக்: முதல் நட்சத்திர ஒளிப்பதிவாளர் | நான்கு நாட்களில் 300 கோடி வசூலைக் கடந்த 'காந்தாரா சாப்டர் 1' | ஸ்பெயின் கார் பந்தயத்தில் மூன்றாமிடம்: அஜித் அணிக்கு உதயநிதி பாராட்டு | ‛மா இண்டி பங்காரம்' படப்பிடிப்பு இம்மாதம் துவக்கம்: சமந்தா வெளியிட்ட தகவல் | துணிக்கடை திறப்பு விழாவில் கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்ட பிரியங்கா மோகன்! |
பாலிவுட்டில் 90களில் முன்னணி நடிகயைக இருந்தவர் கரிஷ்மா கபூர். நடிகர், இயக்குனர், தயாரிப்பாளரான ரந்தீர் கபூரின் மகள். அவருடைய முன்னாள் கணவர் சஞ்சய் கபூர் நேற்று இரவு லண்டனில் திடீர் மாரடைப்பால் காலமானார். விஷயம் அறிந்ததும் கரிஷ்மாவின் தங்கை கரீனா, இவரது கணவர் சைப் அலிகான், நடிகை மலாய்க்கா அரோரா ஆகியோர் மும்பையில் உள்ள கரிஷ்மாவின் வீட்டிற்குச் சென்று ஆறுதல் தெரிவித்துள்ளனர்.
கரிஷ்மா, சஞ்சய் இருவரும் 2003ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். 2016ம் ஆண்டு விவகாரத்து பெற்றனர். அவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் இருக்கிறார்கள். சஞ்சய் கபூர் சிக்ஸ்ட் இந்தியா என்ற நிறுவனத்தின் சிஇஓ-வாக இருக்கிறார்.
விவாகரத்து பெறுவதற்கு முன்பாக சஞ்சய் மற்றும் அவரது அம்மா தன்னைக் கொடுமைப்படுத்தியதாகவும், வரதட்சணை கொடுமை என அவர்கள் மீது வழக்கு தொடுத்திருந்தார் கரிஷ்மா.
விவாகரத்து பெற்ற பின் பிரிய சச்தேவ் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார் சஞ்சய். நேற்று அகமதாபாத் விமான விபத்து பற்றி கூட இரங்கல் தெரிவித்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளனர். போலோ விளையாடிய போது மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார் என செய்தி வெளியாகி உள்ளது.
தன் முன்னாள் கணவர் மறைவு குறித்து கரிஷ்மா சமூக வலைத்தளத்தில் இன்னும் எந்தப் பதிவும் பதிவிடவில்லை கரிஷ்மா.