Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

இத்தனை வயதிலும் இவ்வளவு ஸ்லிம்மா ?, அசத்தும் ஷில்பா ஷெட்டி

10 டிச, 2024 - 11:24 IST
எழுத்தின் அளவு:
So-slim-at-such-an-age,-the-stunning-Shilpa-Shetty


தமிழில் பிரபுதேவா நடித்த 'மிஸ்டர் ரோமியோ' படத்தில் கதாநாயகியாக, விஜய் நடித்த 'குஷி' படத்தில் 'மெக்கரினா' பாடலுக்கு நடனமாடியவர் பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி. ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் 90களில் இருந்து நடித்து வருகிறார்.

சமூக வலைதளங்களில் அவ்வப்போது பதிவுகளையும், போட்டோக்களையும் பதிவிட்டு வரும் பழக்கம் கொண்டவர். ஒரு மகன், ஒரு மகள் இருக்கிறார்கள். தவறாமல் ஜிம் செல்வதையும், யோகா செய்வதையும் வழக்கமாக வைத்திருப்பவர் ஷில்பா.

நேற்று அவருடைய சமூக வலைதளத்தில் ஜிம்மில் அவர் உடற்பயிற்சி செய்யும் சில புகைப்படங்களைப் பதிவிட்டிருந்தார். 50 வயதாகும் ஷில்பா இவ்வளவு ஸ்லிம்மாக இருக்கிறாரா என ரசிகர்கள் ஆச்சரியத்துடன் கமெண்ட் செய்து வருகிறார்கள். உடற்பயிற்சியும், யோகாவும் நமது உடல் அழகிற்கும், இளமைக்கும் எவ்வளவு முக்கியம் என்பதை ஷில்பா போன்ற பிரபலங்கள்தான் அடிக்கடி புரிய வைக்கிறார்கள்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மெய்யழகன் பார்த்து கண்ணீர் விட்டேன் - அனுபம் கெர் நெகிழ்ச்சிமெய்யழகன் பார்த்து கண்ணீர் விட்டேன் ... பெண்களின் பாதுகாப்பை வலியுறுத்தும் பேபி ஜான்: அட்லி பெண்களின் பாதுகாப்பை வலியுறுத்தும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)