எனக்கு பிடித்த பிரபாஸ்: மாளவிகா மோகனன் | அமரன் படத்தை கமல் தயாரிப்பதற்கு காரணமான இயக்குனர் விஷ்ணுவர்தன்! | ‛படைத்தலைவன்' படத்துக்காக இளையராஜா இசையமைத்து எழுதிய பாடல் வெளியானது! | மீண்டும் மணிரத்னம் இயக்கத்தில் நடிக்கிறாரா ரஜினி? | சந்தீப் கிஷனிடம் 50 நிமிடம் கதை சொன்ன ஜேசன் சஞ்சய்! | ரூ.10 கோடி சம்பளமா? ராஷ்மிகா விளக்கம் | சூர்யா 45 படத்தில் இணைந்த நட்ராஜ்! | வாய்ப்புகள் வந்தது எப்படி?: ஜெயித்த ஜனனிதுர்கா | கேரள நடிகைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இயக்குனரால் ‛அப்செட்' ஆன மும்பை நடிகை | விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு குறித்து தகவல் இதோ! |
பிருத்விராஜ் இயக்கத்தில், மோகன்லால், பிருத்விராஜ், மஞ்சு வாரியர், டொவினோ தாமஸ் மற்றும் பலர் நடிப்பில் உருவாகி வரும் மலையாளப் படம் 'எல் 2 - எம்புரான்'. தமிழில் முன்னணி தயாரிப்பு நிறுவனமாக இருக்கும் லைகா புரொடக்ஷன்ஸ் மற்றும் ஆசீர்வாத் சினிமாஸ் இப்படத்தை இணைந்து தயாரிக்கின்றன.
கடந்த வருடம் அக்டோபர் மாதம் ஆரம்பமான இப்படத்தின் படப்பிடிப்பு பல்வேறு இடங்களில் நடைபெற்றது. இங்கிலாந்து, அமெரிக்கா, ரஷ்யா, மொராக்கோ, அரபு நாடுகள் என வெளிநாடுகளிலும் இந்தியாவில் டில்லி, ஷிம்லா, மும்பை, குஜராத், கேரளா, சென்னை, ஹைதராபாத் ஆகிய இடங்களிலும் நடைபெற்று நேற்றுடன் முடிவுக்கு வந்தது.
கடைசி நாள் படப்பிடிப்பு கேரளாவில் உள்ள மலம்புழா அணையில் நடைபெற்றது. படப்பிடிப்பு முடிந்தது குறித்து மோகன்லால், “எல் 2- எம்புரான் படப்பிடிப்பு நிறைவடைந்தது. அமெரிக்கா, இங்கிலாந்து, அரபு நாடுகள் என 4 வெளிநாடுகள், 8 மாநிலங்கள் என 14 மாதப் பயணம் நம்ப முடியாத ஒன்றாக அமைந்தது.
இந்தப் படம் பிருத்விராஜின் அற்புதமான இயக்கத்திற்கு, அதன் மாயாஜாலத்திற்கு ஒவ்வொரு பிரேமிற்கும் சொந்தமானது. இந்தப் படத்தின் மையக்கருவாக அமைந்திருக்கும் தொலைநோக்கு பார்வை கொண்ட கதை சொல்லலுக்கு முரளி கோபிக்கு நன்றி. இப்படத்திற்கான அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டுள்ள ஆண்டனி பெரும்பாவூர் மற்றும் விலைமதிப்பற்ற ஆதரவளித்த லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் அவர்களுக்கும் நன்றி.
இந்தக் கதையை உயிர்ப்பிக்கும் அர்ப்பணிப்புள்ள நடிகர்கள் மற்றும் குழுவினர் இல்லாமல் இவை எதுவும் சாத்தியமில்லை. எல் 2 - எம்புரான், ஒரு கலைஞனாக என் பயணத்தில் ஒரு குறிப்பிடத்தக்க அத்தியாயம். நான் எப்போதும் பொக்கிஷமாகப் போற்றுவேன். எங்கள் அற்புதமான பார்வையாளர்களுக்கு உங்கள் அன்பும் ஆதரவும் ஒவ்வொரு அடியிலும் எங்களுக்கு ஊக்கமளிக்கின்றன. காத்திருங்கள், இன்னும் நிறைய இருக்கிறது,” என எக்ஸ் தளத்தில் நீண்ட பதிவிட்டுள்ளார்.
லூசிபர் 2 - எம்புரான் படம் 2025 மார்ச் மாதம் 27ம் தேதி மலையாளத்தைத் தவிர தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் ஆகிய மொழிகளிலும் டப்பிங் ஆகி வெளியாக உள்ளது.