ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
எப்போதும் சினிமா துறையில் ஹீரோக்களை விட ஹீரோயின்களுக்கு சம்பளத்தை பல மடங்கு குறைத்து கொடுப்பது வழக்கம். இந்நிலையில் இப்போது நடிகை பிரியங்கா சோப்ரா முதல் முறையாக ஹீரோவுக்கு சமமான சம்பளத்தை பெற்று இருக்கிறார். சமீபத்தில் பிரியங்கா சோப்ரா அளித்த பேட்டியில் அவர் கூறியது, "நான் முதல் முறையாக ஹீரோவுக்கு இணையான சம்பளத்தை பெற்றுள்ளேன்.
என் 22 வருட சினிமா வாழ்க்கையில் இது முக்கியமான விஷயமாக கருதுகிறேன். ஹிந்தி படங்களில் நடிக்கும்போது கொஞ்சம் அதிகம் சம்பளம் கேட்க வேண்டும் என்றாலே பயப்படுவேன். தற்போது சிட்டாடல் வெப் தொடரில் நடிக்கும்போது சம்பள விஷயத்தில் கொஞ்சம் பிடிவாதமாகவே ஆகவே இருந்தேன்.
எனக்கு ஹீரோவுக்கு இணையான சம்பளம் வேண்டும் என்று கேட்டேன். ஏதோ அதிசயம் நடந்த மாதிரி நான் கேட்ட சம்பளத்தை தர உடனே ஒப்புக்கொண்டனர். இதை இப்போது கூட என்னால் நம்ப முடியவில்லை'' என்று தெரிவித்துள்ளார்.