ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
இந்திய சினிமாவின் அடையாளமாக சின்னமாக கருதப்படுகிறவர் அமிதாப் பச்சன். 80 வயதை எட்டி உள்ள இவர் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். தொடர்ந்து பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். சமூக வலைத்தளங்களிலும் பிசியாக இருக்கிறார். ஆனாலும் ஹிந்தி தொலைக்காட்சிகள் அமிதாப்பை தொடர்ந்து கிண்டல் செய்து வருகிறது. இதுகுறித்து பலரும் இதுபோன்ற ஆளுமைகளை கேலி பொருளாக்காதீர்கள் என் கூறி வருகின்றனர்.
இந்த நிலையில் அமிதாப் பச்சனின் மகன் அபிஷேக் கண் முன்பே அப்படி ஒரு அவலம் அரங்கேறியதால் அந்த நிகழ்ச்சியை புறக்கணித்து விட்டு அபிஷேக் பச்சன் வெளியேறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் முக்கிய விருந்தினராக பங்கேற்க அபிஷேக் பச்சன் சென்றிருந்தார். இந்த நிகழ்ச்சியை நடிகரும், நடிகை ஜெனிலியாவின் கணவருமான ரித்தேஷ் தேஷ்முக் மற்றும் குஷா கப்பிலா ஆகியோர் தொகுத்து வழங்கினர். அப்போது நிகழ்ச்சியில் ஒருவர் அமிதாப்பச்சனை பற்றி கேலியாக பேசி ஜோக் அடித்தார்.
இதனால் கோபமான அபிஷேக் பச்சன், ''நிறுத்துங்கள். என்னை பற்றி என்ன வேண்டுமானாலும் ஜோக் அடியுங்கள். என் தந்தையை கேலி செய்து பேசுவது நல்லது அல்ல'' என்று ஆவேசமாக கூறிவிட்டு நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார். நிகழ்ச்சியை நடத்தியவர்கள் அவரை சமாதானப்படுத்த முயன்றும் முடியவில்லை. இந்த சம்பவம் அமிதாப் மற்றும் அபிஷேக் ரசிகர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.