அர்ஜுன் ரெட்டி பட இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் 'அனிமல் ' படத்தில் நடிக்கிறார். இது குறித்த அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்பு வெளியானது. மேலும் இந்த படத்தில் அனில் கபூர் மற்றும் பாபி தியோல் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்நிலையில் இப்படத்தில் நடிகை ரஷ்மிகா மந்தான்னா கதாநாயகியாக நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சித்தார்த் மல்ஹோத்ரா உடன் மிஷன் மஜ்னு மற்றும் அமிதாப் பச்சன் நடிக்கும் "குட் பை" படத்திலும் ரஷ்மிகா நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது .