'மண்டாடி' யார்? : இயக்குனர் விளக்கம் | பாடல்கள் ஹிட்டாவதற்கு 'ரீல்ஸ்' வீடியோக்கள்தான் முக்கியமா? | ரஷ்மி முரளி: தோழி நடிகையைத் தேடிய ரசிகர்கள் | விஜய் படம் ரீ-ரிலீசா… அப்போது அஜித் படமும் ரீ-ரிலீஸ்… | விஷ்ணு விஷால் - ஜுவாலா கட்டா தம்பதிக்கு பெண் குழந்தை | WWE-ல் ராணா டகுபட்டிக்குக் கிடைத்த பெருமை | வீர தீர சூரன் ஓடிடி வாங்கிய விலை இவ்ளோதானா? | ஓடிடி-யில் பெரும் விலைக்கு மோகன்லாலின் எல் 2 :எம்புரான் | புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது |
புகழ்பெற்ற இந்திய சினிமா பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் சமீபத்தில் மரணம் அடைந்தார். இவர் 14-க்கும் மேற்பட்ட மொழிகளில் 36 ஆயிரம் பாடல்களை பாடி உள்ளார். இந்தியாவின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருது பெற்ற இவர், இந்தியாவின் நைட்டிங் கேர்ள் என்று அழைக்கப்பட்டார்.
லதா மங்கேஷ்கரின் மறைவுக்கு பிறகு மத்திய பிரதேச அரசு அவரது பிறந்த ஊரான இந்தூரில் அருங்காட்சியகமும், இசைப்பள்ளியும் அமைக்கப்பட உள்ளதாகவும், அவர் பெயரில் இசை கல்லூரி தொடங்க இருப்பதாகவும் அறிவித்துள்ளது.
தற்போது லதா மங்கேஷ்கரின் வாழ்க்கையை சினிமாவாக்கும் முயற்சிகள் தொடங்கப்பட்டுள்ளது. பிரபல இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி, பல ஆண்டுகளாகவே அவர் வாழ்க்கை கதையைப் படமாக்க முயன்றார். ஆனால் அதற்கு லதா மங்கேஷ்கர் அனுமதி தரவில்லை. "என் பாடலை கேட்பதை தவிர மக்கள் என் வாழ்க்கையில் இருந்து கற்றுக்கொள்ள எதுவுமில்லை" என்று அவர் கூறி வந்தார்
இந்நிலையில் இயக்குநர் ஆனந்த் எல்.ராய், ராகேஷ் ஓம் பிரகாஷ் மெஹ்ரா ஆகியோர் தற்போது லதா மங்கேஷ்கர் வாழ்க்கையை படமாக்க தீவிர முயற்சியில் இறங்கி உள்ளனர். இதற்காக லதா மங்கேஷ்கரின் குடும்பத்தினரிடம் அனுமதி வாங்கும் முயற்சியில் அவர்கள் ஈடுபட்டு உள்ளனர். விரைவில் முறையான அறிவிப்புகள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.