படம் 1% ஏமாற்றினாலும் என் வீடுதேடி வரலாம்: 'தி ராஜா சாப்' இயக்குனர் மாருதி பேச்சு | பிரியங்கா மோகனின் கன்னட படம் '666 ஆப்ரேஷன் ட்ரீம் தியேட்டர்' பர்ஸ்ட்லுக் வெளியீடு | பிரபாஸின் 'தி ராஜா சாப்' படத்தின் டிரைலர் இன்று வெளியாகவில்லை! வதந்தியை தெளிவுபடுத்திய படக்குழு! | விக்ரம் பிரபுவின் 'சிறை' படத்தை பாராட்டிய மாரி செல்வராஜ்! | 'டாக்சிக்'-ல் எலிசபெத் ஆக ஹூமா குரேஷி | ரஜினியை வைத்து முதல் மரியாதை போன்ற படம் இயக்க ஆசை! - சுதா கொங்கரா | 'பராசக்தி' படத்தின் இசை வெளியீட்டு விழா, எங்கே, எப்போது? | ரிலீசில் ரிகார்டு!: வசூலில் பெரும்பாடு: தமிழ் சினிமாவில் ரூ.2000 கோடியை ‛‛காலி'' செய்த 2025 | 'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை |

குழந்தைப் பருவத்தில் சினிமாவில் அறிமுகமானவர் சுஜிதா. பூவிழி வாசலிலே, முந்தானை முடிச்சு என, தமிழ், மலையாளம் உட்பட பல மொழிகளில் நடித்துள்ளார். தொலைக்காட்சியில் வெளியான 'பாண்டியன் ஸ்டோர்' (முதல் பாகம்) நாடகத்தில் தனமாக வந்து, இல்லத்தரசிகளின் மனதில் இடம் பிடித்தார். தெலுங்குபாளையத்தில் நடந்த வீட்டுமனை நிகழ்ச்சிக்கு, சிறப்பு அழைப்பாளராக வந்த இவரை சந்தித்து பேசினோம்.
திரைப்படம், நாடகம் என, வித்தியாசத்தை உணர்கிறீர்களா?
சிறு வயதிலிருந்தே நடிக்க துவங்கி விட்டதால், திரைப்படங்கள், தொலைக்காட்சி தொடர்கள் என்ற பெரிய வித்தியாசம் எனக்கு தென்படவில்லை. கால மாற்றத்துக்கு ஏற்ப, ரசனை மாறியிருக்கிறது. பொதுமக்களின் ரசனையை தெரிந்துக் கொண்டு, நம்மை தயார்படுத்தி, நடிப்பை வித்தியாசமாக கொடுக்க வேண்டும். அப்போது, பொதுமக்கள் ஏற்றுக் கொள்வார்கள். ஒரே மாதிரியாக இருந்தால், நடிப்பவர்களுக்கும், அதை பார்க்கும் பொதுமக்களுக்கும் ஒரு விதமான சோர்வு வந்து விடும்.
சினிமாவில் மாற்றம் வருகிறது; நாடகங்களில் நிறைய மாற்றங்கள் வந்தால் நன்றாக இருக்குமே?
சினிமாக்களின் நேரம் இன்று வெகுவாக குறைந்து விட்டது. வித்தியாசமாக கதைக்களம் கொண்ட சினிமாக்களை, பல மொழிகளில் பார்த்து வருகிறோம். அதுபோல், நாடகத்திலும் பல மாற்றங்கள் கொண்டு வரப்பட்டு வருகின்றன. வீட்டில் இருக்கக் கூடிய பெண்கள், பெரியவர்கள் 50 சதவீதத்துக்கும் மேற்பட்டவர்கள், தொலைக்காட்சி தொடர்களை பார்ப்பவர்களாக இருக்கிறார்கள். ஒரு நிமிட 'ரீல்ஸ்' பிடிக்கவில்லை என்றாலும், அதை நகர்த்தி விடுகின்றனர். எல்லாமே சவாலாக இருக்கிறது.
பல தொடர்களை பார்க்கும் போது, பார்வையாளர்களுக்கு சலிப்பு தட்டுகிறதே?
ஒரே மாதிரியான தொடர்கள் கொடுத்தால், பார்ப்பவர்களுக்கும் சலிப்பு தட்டி விடும். எனவே, தொலைக்காட்சி தொடர்களை, பொதுமக்களுக்கு பிடிக்கும் வகையில், குழுவினர், நாளுக்கு நாள் அபரிமிதமான உழைப்பை தர வேண்டியுள்ளது.
இப்போது நடக்கும் தொடர்கள் குறித்து...
மலையாளத்தில் 'அர்ச்சனா சேச்சி' என்ற தொடரில், நடிக்க உள்ளேன். கால நேரம் பார்க்காமல் உழைத்தால் தான் மக்கள் மனதில் இடம் பிடிக்க முடியும். வளர்ந்து வரும் தொழில் நுட்பத்தில், நல்லதும் இருக்கிறது, கெட்டதும் இருக்கிறது. நல்லதை மட்டுமே எடுத்துக் கொண்டால், வாழ்க்கைக்கு அது நல்லது.