தமிழகத்தில் அதிக வசூல் செய்த டாப் 5 படங்கள்...!! | இன்ஸ்டாகிராம் மட்டுமல்ல போன் நம்பரையும் ஹேக் செய்து விட்டார்கள் ; நடிகை லட்சுமி மஞ்சு விரக்தி | மோகன்லால் மகனின் காதல் கல்யாணியுடன் அல்ல ; பிரபல தயாரிப்பாளர் வெளியிட்ட ரகசியம் | நள்ளிரவில் கேரள போலீசாரிடம் ஹோட்டலில் இருந்து குதித்து தப்பிய வில்லன் நடிகர் | 'கனிமா'வைத் தொடர்ந்து 'ஜிங்குச்சா' : மீண்டும் ஒரு திருமணப் பாடல் | 'பெத்தி' படத்தில் இணைகிறாரா காஜல் அகர்வால்? | 'கூலி' படத்தில் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' பிரபலம்! | ரெட்ரோ படத்தின் தணிக்கை மற்றும் நீளம் குறித்து தகவல் இதோ! | ஆன் ஸ்க்ரீன் என்னோட குரு கமல்ஹாசன் - சிலம்பரசன் பேச்சு | பொன்னியின் செல்வன் : தயாரிக்க மறுத்த கமல்ஹாசன் |
எனிமி பட இறுதிக் காட்சி படப்பிடிப்பின்போது, நிப்பாட்டு... நிப்பாட்டு... என கூறியபடியே, என் முகத்தை மூடியபடி குத்து வாங்கிக் கொண்டிருந்தேன். சார்பட்டா பட தாக்கத்தில் என்னை வெளுத்து விட்டான், என, நடிகர் ஆர்யா குறித்து விஷால் தெரிவித்தார். நண்பர்களின் எனிமி குறித்து அவர் நம்மிடம் பகிர்ந்ததாவது:
நண்பர்கள் எனிமி ஆனது ஏன்?
நான் இந்த காரியத்தை செய்தேன். ஆனந்த் கதை சொல்லும் போதே ஆர்யா தான் வில்லன் பாத்திரத்திற்கு ஏற்றவர் என்றார். ஏற்கனவே இரும்புத்திரை படத்திற்கு வில்லனாக நடிக்க ஆர்யாவை கேட்டிருந்தோம். அந்நேரத்தில் அவரால் முடியவில்லை. வில்லனுக்கு முக்கியத்துவம் தரும்போது, நாயகனுக்கும் வலு கூடி விடுகிறது. இப்படத்தில் ஹீரோ - ஹீரோயின் கெமிஸ்ட்ரியை விட, ஹீரோ - வில்லன் கெமிஸ்ட்ரி நல்லா ஒர்க் அவுட் ஆகியுள்ளது.
ஆர்யாவுடன் மோதிய காட்சிகள் தத்ரூபமாக வந்துள்ளதே?
இறுதிக்காட்சியில் ஆர்யாவிடம் நான், நிப்பாட்டு... நிப்பாட்டு... என கூறியபடியே, என் முகத்தை மூடியபடி குத்து வாங்கிக் கொண்டிருந்தேன். படத்தில் பார்த்தாலும் அது தெரியும். மாஸ்டரே போதும் என சொல்லியும் அவன் விடவில்லை. சார்பட்டா படம் முடிந்ததும் வந்த வேகத்தில் என்னையும் வெளுத்து விட்டான். நிஜத்தில் பாக்ஸிங் போட்டிக்கு சென்றாலும் ஆர்யா ஜெயிக்கலாம். இந்த மாதிரி ஒரு கூட்டணி மீண்டும் வருமா என தெரியாது.
எனிமி படம் வெளியிடுவதில் தயாரிப்பாளருக்கு ஏற்பட்ட சிக்கல் குறித்து?
கடந்த 12 ஆண்டுகளுக்கு முன், தீபாவளி என்றால் நான்கு படம் வெளியாகும். அப்போது தியேட்டர்களும் 1,200 இருந்தன. ஆனால் இப்போது 900 தியேட்டர்கள் செயல்படுகின்றன. எனிமி தயாரிப்பாளர் வினோத்குமார், 250 தியேட்டர் வேண்டும் என்றார்; அதில் தப்பே இல்லை. இது குறித்து உதயநிதியிடம் பேசினோம். தற்போது கிட்டத்தட்ட 250 தியேட்டர்களை நெருங்கிவிட்டோம்.
பழைய விஷாலை காணோமே?
எனக்கான வேலையை பார்த்தபடி தான் இருக்கிறேன். நடிகர் சங்க இறுதி தீர்ப்பு வர உள்ளது. சாதகமாக வரும் என நினைக்கிறேன். கட்டட வேலையை முடிக்க காத்திருக்கிறோம்.
அப்போ, அடுத்த தீபாவளி தல தீபாவளியா?
இப்போதைக்கு படங்கள் தொடர்ந்து போய் கொண்டிருக்கின்றன. மற்றவை எல்லாம் நடக்கும் போது நடக்கும்.
தயாரிப்பாளர் வினோத்குமார் குறித்து?
நாயகனுக்கும், தயாரிப்பாளருக்கும் ஒரு புரிதல் இருந்தால் தான் படம் நன்றாக வரும். எனக்கு எப்போதும் அப்படி அமையவில்லை. ஏதாவது ஒரு கசப்பான சம்பவம் நடந்து விடும். ஆனால் வினோத்குமார் அப்படியில்லை. அவருக்கு ஆண்டுக்கு ஒரு படம் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறேன். வினோத் சினிமாவை ரசித்து தயாரிக்கிறார். நம்மளே தயாரித்து நடிக்காமல், வெளி தயாரிப்பாளர்களுக்கும் நடிக்க வேண்டும்.
அடுத்தடுத்த படங்கள்?
வீரமே வாகை சூடும் அடுத்தாண்டு வெளியாகும். துப்பறிவாளன் - 2 நான் தத்தெடுத்த பிள்ளை; அதுவும் அடுத்தாண்டு வெளியாகும். என் கனவுப்படம் அடுத்தது ஆரம்பிக்கும்.
ஓ.டி.டி., வரவை எப்படி பார்க்கிறீர்கள்?
அவர்கள் அனைத்து படத்தையும் வாங்குவதில்லையே. சின்ன படங்கள் இன்னும் தடுமாறியபடி தான் உள்ளன. 50 - 60 படங்கள் வெளியாகாமல் காத்திருக்கின்றன.
ஏமாற்றத்தை எப்படி எடுத்துக் கொள்கிறீர்கள்?
எல்லாமே பாடம் தானே. ஏமாற்றத்தை வரவேற்கிறேன். வாழ்க்கையில் நாம் கற்கும் விஷயம், புத்தகத்தில் கிடைக்காது.கஷ்டப்பட்ட நடிகர் சங்க உறுப்பினர் பெண்மணி ஒருவருக்கு கடந்த நான்காண்டுகளாக பென்ஷன் கொடுத்து வந்தோம். ஆனால் சமீபத்தில் நடந்த சங்க தேர்தலில், அவர் எதிரணிக்கு சென்று ஓட்டு போட்டார். இதுவும் ஒரு பாடம்.
நடிகர் சங்க கட்டடத்தை முடிக்க என்ன பிளான் வைத்துள்ளீர்கள்?
நான்கு மாதம் இருந்திருந்தால், நாங்களே கட்டி முடித்திருப்போம். இன்னும் 15 கோடி ரூபாய் தேவை. துருப்பிடித்த கம்பிகளை சரிசெய்யவே, 1.5 கோடி ரூபாய் தேவை. அந்த சாலையில் செல்லவே மனம் கனக்கிறது. தீர்ப்பை எதிர்பார்த்துள்ளேன். சாதகமாக வந்தால், நிதி திரட்டி கட்டடத்தை முடித்து விடுவோம்.
தெலுங்கு சினிமா சங்கத்தில் பிரகாஷ்ராஜ் தோல்வியை எப்படி பார்க்கிறீர்கள்?
இங்கு ராதிகா அம்மா, என்னை விஷால் ரெட்டி என்றார். அதுபோல் பிரகாஷ் ராஜை அவர்கள் கன்னடிகா என்றனர். எனக்கு சாதகமாக அமைந்தது போல பிரகாஷ் ராஜுக்கு அமையவில்லை. என்னைப் பொறுத்தவரை அனைவருமே இந்தியன்!
- நமது நிருபர் -